விஜய்க்காக நான் வெயிட்டிங்; தளபதியை இயக்க லியோ சக்ஸஸ் மீட்டில் அதிர வைத்த கெளதம் மேனன்!
லியோ படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்ட, இயக்குனர் கெளதம் மேனன், தளபதியை வைத்து இயக்க பிளான் போடும் விதத்தில் சக்ஸஸ் மீட்டில் பேசிய தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி, தாறுமாறாக ஹிட் அடித்த 'லியோ' திரைப்படத்தின் வெற்றி விழா, இன்று மாலை துவங்கிய நிலையில், இதில் இப்படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.
மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள், பேசும் தகவலும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில்... 'லியோ' படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், விஜய்யின் நண்பராகவும் நடித்திருந்த இயக்குனர் கெளதம் மேனன் விழா நடைபெறும் மேடைக்கு வந்து பேசியபோது, "நான் கேட்டது யோகன் அத்தியாயம் ஒன்று, அவர் கொடுத்தது லியோ. நான் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் விஜயுடன் நடித்தது கனவு.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு லோகேஷுக்கு நன்றி. திரிஷா உடன் ஒரு நடிகராக பணியாற்றியது மகிழ்ச்சி. மீண்டும் யோகன் படம் உருவாக வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, விஜய் ஜேம்ஸ் பாண்ட் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என மிஸ்கின் சொன்னார். அப்படி பார்த்தால் யோகன் தான் ஜேம்ஸ் பாண்ட். விஜயுடன் நடித்த போது அவர் என்னை மிகவும் சவுகரியமாக வைத்துக்கொண்டார். விஜய்க்காக நான் வையிட்டிங் என கூறியுள்ளார். இதன் மூலம் விரைவில் கெளதம் மேனன் - விஜய் கூட்டணியில் ஒரு படம் உருவாகினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
- Leo success meet
- Leo success meet Event
- Leo success meet in Chennai
- Thalapathy Vijay Leo success meet Entry
- Trisha in LEO Success Meet
- Vijay Leo success meet
- Vijay Leo success meet Images
- Vijay Leo success meet Live
- Vijay Leo success meet Photos
- Vijay Leo success meet Viral Photos
- Vijay Speech in LEO Success Meet
- leo box office
- lokesh kanagaraj
- priya anand