இவ்ளோ பிளாப் படங்கள்... நீங்க எப்படி சூப்பர்ஸ்டார் ஆக முடியும்? விஜய்யை விளாசிய தயாரிப்பாளர் கே.ராஜன்
ரஜினி இருக்கும்போதே, இன்னொருவரை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால், அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தான் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் என்றும் அவர் தான் தமிழ்நாட்டில் நம்பர் 1 நடிகராக விளங்கி வருவதாகவும் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலரும் பேசி இருந்தனர். இந்த பேச்சு கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : “கடின உழைப்பின் மூலமும், பல வெற்றி படங்களை கொடுத்து, மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ரஜினிகாந்த். பல தயாரிப்பாளர்களை காப்பாற்றியதால் தான் அவர் சூப்பர் ஸ்டார் ஆனர். அவர் படங்களை தயாரித்து நஷ்டம் அடைந்தவர்கள் என எடுத்து பார்த்தால் 2 சதவீதம் கூட கிடையாது. அப்படி நஷ்டம் ஆனாலும், அவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து உதவுவார் ரஜினி. இப்படிப்பட்ட தாராள எண்ணம் கொண்டவராக இருப்பதனால் தான் அவரை மக்கள் சூப்பர் ஸ்டார் என ஏற்றுக் கொண்டார்கள்.
அவர் இருக்கும்போதே, இன்னொருவரை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால், அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அதற்கு சமமாக வேறு எந்த பெயரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். சரத்குமாரை சுப்ரிம் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இன்றும் அவர் சுப்ரிம் ஸ்டார் தான். அப்படி இருக்கையில் அவர் எப்படி விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்? விஜய் முன் அவரை புகழ்வது தப்பில்லை. ஆனால், அதற்கு சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்ததை தவிர்த்திருக்கலாம்.
இதையும் படியுங்கள்... இது எங்க டயலாக் மாமே... காப்பி சர்ச்சையில் சிக்கிய வாரிசு டிரைலர் - விஜய்யை வெளுத்து வாங்கும் ரஜினி ரசிகர்கள்
என்னைப் பொறுத்தவரை நம்பர் 1 என்பது நிலையானது இல்லை. சினிமாவுக்கும் அது பொறுந்தும். அற்புதமான படத்தை எந்த இயக்குனர் தருகிறானோ, அதன்மூலம் கிடைக்கும் வெற்றி தான் நம்பர் 1. ஹீரோலாம் ஒன்னும் கிடையாது, இயக்குனர் தான் எல்லாத்துக்கும் காரணம். ஏனென்றால் படத்தை வெற்றி பெற வைப்பதே இயக்குனர்கள் தான்.
விஜய்யை நம்பர் 1 என்று சொன்னால், அவர் நடித்த எல்லா படமும் ஓடியிருக்கணுமே? தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் - அஜித் இருவரும் சமம். பிகில், வலிமை, விவேகம், மெர்சல் போன்ற படங்கள் தோல்வியடைந்தன. குறிப்பாக மெர்சல் படத்தை எடுத்த தயாரிப்பாளரால் அதன்பின் ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை. அப்புறம் எப்படி நீ நம்பர் 1-ஆ இருக்க முடியும்?
எப்போதுமே படம் தான் நம்பரை தேர்வு செய்யும். பிரதீப் ரங்கநாதன் 6 கோடியில் லவ் டுடே படத்தை எடுத்து அதன்மூலம் 100 கோடி வருவாய் எடுத்திருக்கிறான் என்றால் அவன் தான் இப்போதைக்கு நம்பர் 1” என அந்த பேட்டியில் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ பக்கம் செல்ல தயக்கம் காட்டுகிறாரா சூர்யா..! திடீரென பிளானை மாற்றியதன் பின்னணி என்ன?