MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி 67-ல் டுவிஸ்ட் வைத்த லோகேஷ்... சமந்தா வில்லி ஆனதால் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?

தளபதி 67-ல் டுவிஸ்ட் வைத்த லோகேஷ்... சமந்தா வில்லி ஆனதால் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?

Thalapathy 67 Heroine : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 20 2022, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜய், 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றன. இதனால் நடிகர் விஜய்யின் சம்பளமும் படத்துக்கு படம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது இவர் நடித்து வரும் வாரிசு படத்திற்காக ரூ.120 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

24

பொதுவாக நடிகர் விஜய் ஒரு படத்தில் நடித்து முடித்த பின்னர் தான் அடுத்த படத்தில் கமிட் ஆவார். ஆனால் தற்போது முதன்முறையாக இவர் வாரிசு படத்தில் நடிக்கும் முன்னரே தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டார். லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால் தளபதி 67 படத்தின் மீதான் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... 48 வயதில் மீண்டும் கர்ப்பம்! பொன்னியின் செல்வன் பட விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் ஆப்சென்ட் ஆனதற்கு இதுதான் காரணமா?

34

அவர் தற்போது நடித்து வரும் வாரிசு படத்தை விட இப்படத்திற்கு தான் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக இப்படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இப்படத்தில் நடிகை சமந்தா, விஜய்க்கு வில்லியாக நடிக்க உள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.

44

இந்நிலையில், தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்து பேமஸான நடிகை பிரியங்கா மோகன் தான் தளபதி 67-ல் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கட்டி பிடித்து ஒரே கொஞ்சல்ஸ்... ஷூட்டிங் இல்லாததால் அட்ராசிட்டி பண்ணும் அமலா பால்! ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
சமந்தா ரூத் பிரபு
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிசுகிசுக்களுக்கு இடையில் ஒரு மௌன ராகம்.! ராஷ்மிகா - விஜய் ஜோடியின் கியூட் லவ் ஸ்டோரி!
Recommended image2
சினிமாவில் சிகரெட் பிடிக்க மறுத்த சிங்கம்! கையிக்கு வந்த பணத்தை துச்சமாக தூக்கியெறிந்த டி.ஆர்!
Recommended image3
கார்த்திகை தீபம் ஷாக்: உண்மையை உடைத்த ஜோதிடர்! ரோகிணிக்கு அபார்ஷன் ஆனதா? இல்லையா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved