2வது கணவருடன் ஹாயாக ஹனிமூன் சென்ற பிரியங்கா தேஷ்பாண்டே - அதுவும் இந்த நாட்டுக்கா?
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு அண்மையில் இரண்டாவது திருமணம் நடைபெற்ற நிலையில், அவர் தற்போது ஹனிமூன் கொண்டாட சென்றிருக்கிறார்.

Priyanka Deshpande - DJ Vasi Sachi Honeymoon Photos : விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் அதில் ஒளிபரப்பான ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பிரவீனை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் பிரியங்கா தேஷ்பாண்டே.
பிரியங்கா தேஷ்பாண்டே - டிஜே வசி
டைட்டில் வின்னர் பிரியங்கா
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளான பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகியவற்றில் போட்டியாளராகவும் களமிறங்கி இருக்கிறார். இதில் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்ட பிரியங்கா, பைனல் வரை சென்றாலும் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். இதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி அதில் டைட்டில் வின்னராக தேர்வானார்.
பிரியங்கா தேஷ்பாண்டே கணவர்
மணிமேகலை உடன் மோதல்
அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் போது மணிமேகலை உடன் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இதனால் மணிமேகலை அந்நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து கடும் விமர்சனங்களை சந்தித்தார் பிரியங்கா தேஷ்பாண்டே. இதனிடையே அண்மையில் திடீரென தனது இரண்டாவது திருமண புகைப்படங்களை பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்தார் பிரியங்கா.
பிரியங்கா தேஷ்பாண்டே ஹனிமூன் போட்டோஸ்
பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவது திருமணம்
அதன்படி கடந்த ஏப்ரல் 16-ந் தேதி தான் டிஜே வசி சச்சி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் அவரின் இரண்டாவது கணவர் நரை முடியுடன் காணப்பட்டதால், வயதானவரை பிரியங்கா திருமணம் செய்துகொண்டதாக விவாதங்கள் எழுந்தன. பின்னர் தான் வசி பற்றிய விவரங்கள் வெளிவந்தன. அவருக்கு 42 வயது தான் ஆகிறது என்றும், இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
கணாவருடன் லண்டனில் பிரியங்கா
ஹனிமூன் சென்ற பிரியங்கா தேஷ்பாண்டே
இந்நிலையில், நடிகை பிரியங்கா தேஷ்பாண்டே, தன்னுடைய இரண்டாவது கணவர் வசி உடன் ஹனிமூன் கொண்டாட சென்றிருக்கிறார். இருவரும் ஜோடியாக லண்டனுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்றுள்ளனர். அப்போது அங்கு தன்னுடைய 33-வது பிறந்தநாளையும் கொண்டாடி இருக்கிறார் பிரியங்கா. இருவரும் லண்டனில் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.