23 ஆண்டுகளுக்கு பின் பிரபல ஹீரோ உடன் மீண்டும் இணைந்த ஹரி!
ரத்னம் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரி அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் யார் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Director Hari Next Movie
பிரஷாந்த் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய ஐயா, சாமி, தாமிரபரணி என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்ததால் முன்னணி இயக்குனராக உயர்ந்தார் ஹரி. இதன்பின்னர் சூர்யா உடன் கூட்டணி அமைத்த ஹரி அவரை வைத்து, ஆறு, வேல் ஆகிய குடும்பப் பாங்கான படங்களை இயக்கினார். இந்தப் படங்களைத் தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் உருவான சிங்கம் படம் வேறலெவல் ஹிட் அடித்தது.
Prashanth 55
ஹரியின் அடுத்த படம்
சிங்கம் படத்தின் அதிரி புதிரியான வெற்றியால் அதன் மூன்று பாகங்களை ஹரி இயக்கினார். பின்னர் சாமி ஸ்கொயர், ரத்னம் என அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படங்கள் எதுவும் சரிவர போகாததால், கம்பேக் கொடுக்கும் முனைப்போடு தற்போது தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஹரி. இப்படத்தில் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க உள்ளார். நடிகர் பிரஷாந்தின் 55வது படமாக இது உருவாக உள்ளது. இப்படம் பிரஷாந்தின் பிறந்தநாளான இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... சினிமா கைவிட்டாலும்; பிசினஸில் கொடிகட்டிப் பறக்கும் பிரசாந்த் - இத்தனை கோடிக்கு அதிபதியா?
Actor Prashanth
23 ஆண்டுகளுக்கு பின் இணையும் ஹரி - பிரஷாந்த்
நடிகர் பிரஷாந்தும், இயக்குனர் ஹரியும் ஏற்கனவே தமிழ் என்கிற படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர். அப்படம் மூலம் தான் ஹரி இயக்குனராக அறிமுகமானார். தற்போது 23 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தான் தயாரிக்க உள்ளாராம். இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம்.
Prashanth Next Movie
ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா பிரஷாந்த்?
நடிகர் பிரசாந்த் கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு வெளிவந்த அந்தகண் படம் மூலம் அவர் தரமான கம்பேக் கொடுத்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் அவர் நடித்த கோட் படமும் வெற்றியடைந்தது. இந்த நிலையில், ஹரி படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க தயாராகி வருகிறார் பிரஷாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. பிரஷாந்துடன் நடிக்கபோவது யார் யார் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... மனைவிக்கு ஐஸ் வைக்க ஹரி எழுதிய பாடல் வரிகள்; நம்பி ஏமாந்து போன நா முத்துக்குமார்!