ஹெல்மென்ட் போடாமல் பேட்டி கொடுத்து Fine கட்டிய பிரஷாந்த்! செய்தியாளர் சந்திப்பில் கொடுத்த விளக்கம்!
நடிகர் பிரஷாந்த், தன்னுடைய படத்தின் புரோமோஷனுக்காக எடுக்கப்பட்ட பேட்டியில் ஹெல்மெண்ட் அணியாமல் வண்டி ஓட்டிய நிலையில், போலீசார் இதற்காக அவருக்கு Fine போட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
Top Star Prashanth:
பல பெண் ரசிகர்களால், 90-களில் ஆண் அழகன் என வர்ணிக்கப்பட்டவர் தான் பிரஷாந்த். நிறம், அழகு என அப்போதைய இளம் நடிகர்கள் அனைவரை விடவும் ஒரு படி மேலே இருந்ததால் தான் என்னவோ இவருக்கு டாப் ஸ்டார் என்கிற பட்டமும் கிடைத்தது.
Prashanth's Ponnar Shankar movie:
கலைஞர் வசனத்தில் இவர் நடித்த வரலாற்று படமான 'பொன்னர் ஷங்கர்' படத்திற்காக, கிட்ட தட்ட 5 வருடங்கள் எந்த ஒரு படத்தையும் ஏற்காமல் அதே கெட்டப்பில் இருந்தார். பாகுபலி அளவுக்கு இந்த படம் தனக்கு பெயர் வாங்கி தரும் என எதிர்பார்த்த பிரஷாந்துக்கு கிடைத்தது என்னமோ ஏமாற்றமே. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், போட்ட பணத்தை கூட வசூலிக்காமல் தோல்வியை கண்டது.
Prashanth Andhagan Movie:
இதை தொடர்ந்து, தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை எதிர்கொண்ட பிரஷாந்த்.. அதில் இருந்து மீண்டு வந்து நடித்த சாகசம், ஜானி, போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை கொடுக்காத நிலையில், கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக மாறினார். ஆனால் தற்போது மீண்டும் புதிய எனர்ஜியுடன் களமிறங்கியுள்ள பிரஷாந்த், அந்தகன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்கி, தயாரித்தும் உள்ளார்.
Andhagan Movie Promotion
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் பணியில் தீவிரம் காட்டி வரும் பிரஷாந்த்... சமீபத்தில் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு பிரஷாந்தின் வண்டியில் பயணித்து கொண்டே பேட்டி கொடுத்தார். பின்னர் பிரஷாந்தை பேட்டி கண்ட தொகுப்பாளரும் அமர்ந்திருந்தார்.
வயநாடு நிலச்சரிவால் கதறும் கேரள மக்களுக்கு ஓடி வந்து உதவிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்!
Prashanth Bike Ride Wear Without Helmet
இந்த பேட்டி வெளியாகி வைரலானதுக்கு முக்கிய காரணம் இதில் இடம்பெற்ற கன்டென்டை விட, பிரஷாந்த் ஹெல்மெண்ட் போடாமல் வண்டி ஓட்டியதால் தான். நெட்டிசன்கள் சிலர் ஹெல்மெண்ட் போடாமல் அப்பாவி மக்கள் சென்றால் அவர்களை பிடித்து Fine போடும் காவல் துறை கண்களுக்கு இது போன்ற நடிகர்கள் செய்வது மட்டும் தெரிவதில்லை என்பது போல் ட்ரோல் பண்ண துவங்கினர்.
Traffic Police Put Rs 1000 Fine:
இந்நிலையில் இதுகுறித்த CCTV ஆதாரமும் சிக்கியதால், பிரஷாந்துக்கும், தொகுப்பாளருக்கும் தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பான ரசீதும் சமூக வலைத்தளத்தில் வைரலானது.இதுகுறித்து திருச்சியில் பட புரோமோஷனில் கலந்து கொண்ட பிரஷாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப... இதுகுறித்து பேசிய பிரஷாந்த், கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஹெல்மெட் விழிப்புணர்வில் நான் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன். பலருக்கு ஹெல்மெண்ட் வழங்கியுள்ளேன், இதுகுறித்த செய்திகளை நீங்களே வெளியிட்டுள்ளீர்கள்.
Prashanth Explanation:
இப்போது இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த எனக்கும் மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைவரும் ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டுங்கள். வண்டியில் வேகமாக செல்லாதீர்கள். செல்ல வேண்டிய இடத்திற்கு 5 நிமிடத்திற்கு முன்பே செல்லுங்கள். உங்களை நம்பி ஒரு குடும்பம் உள்ளது. பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.