'என் தேனு முட்டாயே'..மார்கழி மாசத்து மழையே.. மகளை வாழ்த்தும் பிரச்சன்னாவின் பொருள் பொதிந்த கவிதை..
நட்சத்திர ஜோடிகளான பிரசன்னா-சினேகாவின் மக்கள் சமீபத்தில் பிறந்தநாள் கண்டுள்ளார்.. அந்நாளில் மக்களுக்காக நடிகர் பிரசன்னா எழுதியுள்ள கவிதை தற்போது வைரலாகி வருகிறது...
prasanna-sneha family
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த, சினேகா திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின்பும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.
prasanna-sneha family
சூர்யா - ஜோதிகாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் காதல் தம்பதி சினேகா - பிரசன்னா தான்.
prasanna-sneha family
2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டது. பின்பு இரு வீட்டார் சம்மத்துடன் பிரம்மாண்டமாக சென்னையில் திருமணம் நடைப்பெற்றது.
prasanna-sneha family
2015ம் ஆண்டு இந்த காதல் தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். இதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சினேகாவிற்கு வேலைக்காரன் படம் மூலம் ரசிகர்கள் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தனர்
prasanna-sneha family
இந்த படத்தில் நடித்து முடித்ததும், சில பட வாய்ப்புகள் இவரை தேடி வர துவங்கியது. ஆனால் சினேகா மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். தனுஷுடன் 'பட்டாஸ்' படத்தை கர்ப்பமாக இருக்கும் போதே நடித்து முடித்த சினேகா பின்னர் குழந்தையும் பெற்றெடுத்தார்.
prasanna-sneha family
மகளுக்கு தற்போது இரண்டு வயது ஆகிவிட்டதால், மீண்டும் பட வாய்ப்பை தேடி வரும் சினேகா, அவ்வப்போது கணவருடன் சேர்ந்து விளம்பர படங்களிலும் நடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
prasanna-sneha family
தன்னுடைய கணவர், மகன், மகள் என அனைவருடனும் மிகவும் சந்தோஷமாக இந்த பொங்கலை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சினேகா.
prasanna-sneha family
பிரசன்னா-சினேகாவின் மகள் சமீபத்தில் பிறந்தநாள் கண்டுள்ளார்.. அந்நாளில் மக்களுக்காக நடிகர் பிரசன்னா எழுதியுள்ள கவிதை தற்போது வைரலாகி வருகிறது... மகளின் புகைப்படங்களை பகிர்ந்த பிரசன்னா..என் தேனு முட்டாயே!
மார்கழி மாசத்து மழையே,
என் சிரிக்கும் மத்தாப்பே!
வீட்டுல வளருற நிலவே,
என் செல்ல பொன்வண்டே!
வெல்ல கட்டி முத்தமே,
என் உசுரு மொத்தமே!
சாமியே செஞ்ச தவமே!மகளே!
நீ வாழு நூறு யுகமே❤❤ இவ்வாறு வாழ்த்து மடல் எழுதியுள்ளார்..