MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை இதுதானாம்!

பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை இதுதானாம்!

Love Insurance Kompany Movie Story in Tamil : பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனின் படத்தின் கதை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 01 2025, 11:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Love Insurance Kompany Movie Story in Tamil : தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறிய பட்ஜெட் ஹீரோ பிரதீப் ரங்கநாதன். எதார்த்தமாக எடுக்கப்பட்ட கோமாளி படத்தை ஹிட் கொடுத்து கேமியோ ரோலில் நடித்து இன்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் ரேஞ்சிற்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அவரது கடின உழைப்பிற்கு கிடைத்த மகுடமாக இது பார்க்கப்படுகிறது. கோமாளி ஹிட்டுக்கு பிறகு லவ் டுடே என்ற சிறிய பட்ஜெட் படத்தை இயக்கி அதில் நடித்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து கொடுத்திருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை இதுதானாம்!

பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை இதுதானாம்!

இந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு லவ் டுடே ரூ.100 கோடி வரையில் லாபத்தை கொடுத்திருக்கிறது. அப்படியொரு ஹிட் மூவிஸ், யாருமே யோசிக்காத ஒரு திரைக்கதை. இன்றைய தலைமுறை இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூட சொல்லலாம். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடித்த டிராகன் படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரூ.37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கிவிட்டது.

35
Pradeen Ranganathan, Love Insurance Kompany

Pradeen Ranganathan, Love Insurance Kompany

இந்தப் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு இந்தப் படமும் அதிகளவில் லாபத்தை கொடுத்திருக்கிறது. காதல், கல்லூரி வாழ்க்கை, வேலை ஆகியவற்றை மையப்படுத்தி இந்தப் படம் உலகிற்கு போலி சான்றிதழால் ஏற்படும் பின்விளைவுகளை வெளிச்சம் போட்டு காட்டியது. இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார்.

45
LIK Movie, Dragon Box Office Collection, Krithi Shetty

LIK Movie, Dragon Box Office Collection, Krithi Shetty

இந்தப் படத்தில் அவருடன் இணைந்து கீர்த்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷான், மிஷ்கின், சீமான், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, ஷா ரா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றன. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது

55
Time Travel Movie, Vignesh Shivan, Love Insurance Kompany Story in Tamil

Time Travel Movie, Vignesh Shivan, Love Insurance Kompany Story in Tamil

தனது காதலுக்காக மொபைல் கேஜெட் மூலமாக 2035 வரை பயணிக்கும் ஒரு மனிதனைப் பற்றிய படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. ஏற்கனவே விஷாலில் நடிப்பில் வந்த மார்க் ஆண்டனி டைம் டிராவல் கதையை மையப்படுத்தி வெளியான நிலையில் இந்தப் படமும் அதே போன்று ஒரு கதையை மையப்படுத்தியிருக்கும் நிலையில் காதல் மற்றும் காமெடியுடன் இந்தப் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved