- Home
- Cinema
- இரண்டாவது காதல் மனைவியுடன் திருப்பத்திற்கு திடீர் விசிட் அடித்த பிரபு தேவா!! முதல் முறையாக வெளியான புகைப்படம்!
இரண்டாவது காதல் மனைவியுடன் திருப்பத்திற்கு திடீர் விசிட் அடித்த பிரபு தேவா!! முதல் முறையாக வெளியான புகைப்படம்!
பிரபல நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா (Prabhu deva)... நயன்தாராவை பிரிந்த பின், இரண்டாம் திருமணம் (Second Marriage) செய்து கொண்ட நிலையில், தற்போது தன்னுடைய காதல் மனைவியுடன் திருப்பதிக்கு விசிட் நடித்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஒரு சாதாரண டான்ஸ் மாஸ்டராக திரையுலகில் காலடி எடுத்து வைத்து, பின்னர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என உச்சம் தொட்ட பிரபலமாக உயர்ந்தவர் பிரபுதேவா.
இவருடைய தனித்துவமான நடிப்புக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடன அமைப்பில் உருவான ரவுடி பேபி பாடல் 100 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு, பல்வேறு சாதனைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிரவுதேவா கடந்த 1995 ஆம் ஆண்டு ரமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகளும் இருந்தனர்.
இவர்களில் பிரபு தேவாவின் மூத்த மகன், விஷால் 12 வயதில் மூலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு உயிரிந்தார். இவரது மரணம் பிரபு தேவாவை மிகவும் பாதித்தது.
பின்னர் நடிகை நயன்தாரா - பிரபுதேவா இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் வலம் வந்தனர். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற தகவல் ஊடகங்களில் கசிந்தது. இதை விரும்பாத ரமலதா மகளிர் அமைப்புகளை நாடி தனது தரப்பு நியாயத்தை கோரி இவர்களுடைய காதலுக்கு முட்டுக்கட்டை போட்டார்.
இதனால் கடந்த 2011 ஆம் ஆண்டு ரமலதாவை பிரவுதேவா விவாகரத்து செய்தார். அதே நேரத்தில் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக நயன்தாராவிடம் இருந்தும் தன்னுடைய காதலை முறித்து கொண்டார்.
நயன்தாராவை பிரிந்த பின்னர் பிரபு தேவா பிசியோதெரபி டாக்டர் ஹிமானி என்பவரை கடந்த ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இந்த தகவலை அவரது சகோதரர் உறுதி செய்தார்.
இவர்களது திருமணம் பிரபு தேவாவின் பெற்றோர் சம்மதத்துடன், அவருடைய வீட்டிலேயே நடந்ததாகவும், இத்திருமணத்திற்கு அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு வாழ்த்தியதாக கூறப்பட்டது.
சல்மான் கான் படத்தை இயக்கி வரும் போது, பிரபு தேவா மும்பையில் சில மாதங்கள் தாங்கினார். அப்போது அவருக்கு முதுகுவலி காரணமாக பிசியோதெரபி மருத்துவரிடம் சென்றதாகவும் அந்நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
பின்னர் காதல் விவகாரத்தை வீட்டில் கூறி இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திலும் முடிந்தது. இதுவரை தன்னுடைய இரண்டாவது மனைவியை வெளியுலகிற்கு காட்டாமல் இருந்த பிரபு தேவா தற்போது முதல் முறையாக வெளியுலகிற்கு காட்டியுள்ளார்.
திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகும் நிலையில், தற்போது தன்னுடைய இரண்டாவது மனைவி ஹிமானியுடன் திருப்பத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
திருப்பதிக்கு வந்த பிரபு தேவாவுடன் ரசிகர்கள் பலர் செல்ஃபி எடுக்க முன்வந்த போது, பொறுமையாக அனைவருடனும் செல்ஃபி எடுத்து கொண்டுள்ளார்.