Nayanthara: நயன்தாரா தலையில் இடியை இறக்கிய பிரபு தேவாவின் 3 கண்டீஷன்; பிரேக்கப் பின்னணி!
Nayanthara and Prabhu Deva Breakup: நடிகை நயன்தாரா, பிரபு தேவா மீதான காதலை உதறி தள்ள அவர் போட்ட 3 முக்கிய நிபந்தனைகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதுபற்றிய பிளாஷ் பேக் (Flash Back) தகவலை பார்ப்போம்.

மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் தமிழுக்கு வந்த நடிகை நயன்தாராவின் திரைப்பயணம், இயக்குனர் ஹரி இயக்கிய 'ஐயா' படம் மூலம் தொடங்கியது. இதை தொடர்ந்து 2-ஆவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'சந்திரமுகி' படத்தில் நடித்து பிரபலம் ஆனார். பின்னர் கஜினி, சிவகாசி, ஈ, வல்லவன் என இவர் தேர்வு செய்து நடித்த படங்களின் வெற்றி, அவருக்கு திரையுலகில் நல்ல அடையாளத்தை பெற்று கொடுத்தது.
நயன்தாராவின் காதல்
முன்னணி இடத்தை பிடித்த பின்னர், நயன்தாரா சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக உருவெடுத்தார். சிம்புவுடன் 'வல்லவன்' படத்தில் நடித்த போது... திரைப்படத்தை தாண்டி நிஜத்திலும் இவர்களுக்கு லவ் கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆகி, காதலில் விழுந்தனர். நயன்தாராவை வெளிநாட்டுக்கு கூட்டி சென்று டேட்டிங் செய்தார் சிம்பு. இருவரும் தனிமையில் இருக்கும் போது எடுத்து கொண்ட சில புகைப்படங்கள் வெளியாகி இவர்களின் காதலை உறுதி செய்தது.
சிம்பு உடனான காதல் முறிவு
சிம்பு தரப்பில் இருந்து தான், இந்த புகைப்படங்கள் லீக் ஆனதாக கூறப்பட்ட நிலையில், நயன்தாரா.. சிம்பு உடனான தன்னுடைய காதலை முறித்து கொண்டார். பின்னர் சிங்கிளாக சுற்றி வந்த நயன்தாரா தளபதி விஜய்யுடன் 'வில்லு' படத்தில் நடித்த போது, அந்த படத்தின் இயக்குனர் பிரபு தேவாவை காதலிக்க துவங்கினார்.
வெளிப்படையாக விருது விழாக்களில் ஜோடியாக கலந்து கொண்ட நயன்தாரா - பிரபு தேவா
ஆரம்பத்தில் தங்களின் காதலை ரகசியமாக வைத்திருந்தாலும், பின்னர் காதலை வெளிப்படையாக வெளிச்சம்போட்டு காட்டும் விதமாக, பட விழாக்களில் கலந்து கொண்டனர். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரபு தேவாவை விட்டு நயன்தாரா விலகியதற்கு அவர் போட்ட 3 முக்கிய நிபந்தனைகள் தான் காரணம் என கூறப்படுகிறது.
அதே போல் நயன்தாராவுக்காக எதையும் விட்டு கொடுக்க தயாராக இருந்த பிரபு தேவா, காதலித்து திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.
மூக்குத்தி அம்மன் 2 படத்துக்காக மகன்களுடன் விரதம் இருக்கும் நயன்தாரா!
மதம் மாற தயாராக இருந்த நயன்தாரா:
கிறிஸ்தவரான நயன்தாராவை, பிரபு தேவா தன்னுடைய மதத்திற்கு மாற வேண்டும் என கூறிய நிலையில், அதற்க்கு நயன்தாரா முழு சம்மதம் தெரிவித்ததோடு, இந்துவாகவும் மாறியதாகவும் கூறப்பட்டது. அதே போல், என்னுடைய முதல் மனைவியை விட்டு நான் பிரிந்தாலும் என்னுடைய குழந்தைகள் எனக்கு முக்கியம் அவர்கள் என்னுடன் தான் இருப்பார்கள் என கூறியுள்ளார். நயன்தாராவுக்கு இதில் முழு ஈடுபாடு இல்லை என்றாலும், குழந்தைகள் என்பதால் ஒப்புக்கொண்டாராம்.
நயன்தாரா - பிரபு தேவா பிரிவுக்கு காரணமான 3-ஆவது கண்டீஷன்:
ஆனால் பிரபு தேவாவின் 3-ஆவது கண்டீஷன் தான், பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்து ஒரே அடியாக பிரபு தேவாவிடம் இருந்து, நயன்தாராவையே பிரித்துள்ளது. நயன்தாரா தன்னை திருமணம் செய்த பின்னர், அவர் நடிக்கவே கூடாது என்பதில் பிரபு உறுதியாக இருந்துள்ளார். ஆனால், நயன்தாரா பல முறை இதுபற்றி பேசி தன்னுடைய நிலைப்பாட்டை புரிய வைக்க நினைத்தும், அவர் கேட்கவில்லை. மாறாக பிரச்சனை தான் பெரிதாக வெடித்து ஒரு கட்டத்தில் இனி ஒன்றாக வாழ முடியாது என முடிவு செய்து பிரிந்தனர்.
டயானா மரியம் குரியன் ‘நயன்தாரா’ லேடி சூப்பர் ஸ்டார் ஆன கதை தெரியுமா?
சந்தோஷமாக வாழ்ந்து வரும் நயன்தாரா:
பிரபு தேவாவுடனான பிரேக் கப்புக்கு, பின்னர் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருணம் செய்து கொண்டார். அதே போல், பிரபு தேவாவும் ஹிமானி சிங் என்கிற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் தற்போது தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதே நேரம் பிரபு தேவாவுடனான பிரேக்கப் தான் நயன்தாரா திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது என்றால் அதில் எந்த விட சந்தேகமும் இல்லை.