பிரபுதேவாவுடன் அனுசுயா ரொமான்ஸ்; மொபைலில் ரெக்கார்டிங்.. வைரலாகும் வீடியோ
Prabhu Deva and Anasuya Bharadwaj Romantic Song: நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவாவுடன் அனுசுயா பரத்வாஜ் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது பிரபுதேவா, அனுசுயா நடிக்கும் 'வுல்ஃப்' பட பாடல்.

பிரபு தேவா
தெலுங்கு சினிமாவில் அனுசுயாவின் வேகம் சற்று குறைந்துள்ளது. ரங்கஸ்தலம், புஷ்பா, க்ஷணம் போன்ற படங்களில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். ஒரு கட்டத்தில், அனுசுயா நடித்தால் படம் ஹிட் என பேசப்பட்டது. இதனால் தொகுப்பாளினி பணியை விட்டுவிட்டு நடிகையானார். ஆனால் சமீபகாலமாக சிறு பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
வுல்ஃப்
தற்போது தமிழிலும் சில படங்களில் நடித்து வருகிறார். ஸ்டார் நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் 'வுல்ஃப்' படத்தில் அனுசுயா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வினு வெங்கடேஷ் இயக்கும் இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது. டீசர் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்டது. அதன் பிறகு படம் குறித்த எந்த தகவலும் இல்லை.
ரொமான்டிக் பாடல்
தற்போது திடீரென ஒரு ரொமான்டிக் பாடல் வெளியாகியுள்ளது. 'சா சா' எனத் தொடங்கும் இந்த பாடலில் பிரபுதேவாவுடன் அனுசுயா, ராய் லட்சுமி, அஞ்சு குரியன் ஆகிய மூன்று நடிகைகள் ரொமான்ஸ் செய்துள்ளனர்.
பிரபுதேவாவுடன் நடிகைகள் ரொமான்ஸ்
ஆனால், இந்தப் பாடலின் நடனம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பிரபுதேவாவுடன் நடிகைகள் ரொமான்ஸ் செய்வது ஓகே, ஆனால் அதை இன்னொருவர் வீடியோ எடுப்பது போல் காட்டியுள்ளது முகம் சுளிக்க வைத்துள்ளது. இது என்ன பைத்தியக்காரத்தனம் என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.
எல்லை மீறிய காட்சி
பாடலின் முடிவில் அஞ்சு குரியன், பிரபுதேவாவின் கால் விரலைக் கடிப்பது போன்ற காட்சி எல்லை மீறியதாக உள்ளது. இந்த பாடலில் அனுசுயா நீல நிற புடவையில் கவர்ச்சியாக தோன்றுகிறார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.