Breaking: நடிகர் பிரபாஸின் 'ஆதிபுருஷ்' ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! படக்குழு வெளியிட்ட தகவல்..!
'பாகுபலி' பட நாயகன் பிரபாஸ் நடிப்பில், ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்த 'ஆதிபுருஷ்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி, திடீரென மாற்றப்பட்டுள்ளதாக, படக்குழு அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களில் நடித்ததை தொடர்ந்து, உலக அளவில் ரசிகர்களால் ரசிக்கப்படும் நாயகனாக மாறிய பிரபாஸ் நடிப்பில், அடுத்தடுத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான 'சாஹோ' மற்றும் 'ராதே ஷியாம்' ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தது. எனவே அடுத்ததாக வெளியாகும் படத்தில் தன்னுடைய வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் பிரபாஸ்.
இந்நிலையில் இவருடைய நடிப்பில் மிக பிரம்மாண்டமாக, சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. ராமாயண கதையை மையமாக வைத்து 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே 'ஆதிபுருஷ்' திரைப்படம், ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஜூன் 16 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது படக்குழு, இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 'ஆதிபுருஷ்' திரைப்படம் அல்ல, ஆன்மீக நூலான ராமாயணத்தை தவிழு, எடுக்கப்படும் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை வரலாறு. இதனை படமாக திரையில் பார்க்கும் போது, ரசிகர்கள் பரவசமடைய வேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்ள சில நாட்கள் தேவைப்படுகிறது. எனவே ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16 ஆம் தேதி 2023 அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் பிரபாஸின் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. இந்த படத்தில் ராமராக நடிக்க சுமார் 100 கோடி ரூபாய் பிரபாஸ் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில், ராவணனாக பாலிவுட் நடிகர் சைப் அலிகானும், சீதை கதாபாத்திரத்தில் கிர்தி சனோனும் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து 'மகாநடி' பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ப்ராஜெக்ட் கே என்னும் படத்திலும் பிரபாஸ் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட்டும் சுமார் 500 கோடி என கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனும், முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாபச்சன் ஆகியோர் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.