Ajith Thunivu: அட்ராசக்க... மலேசியாவில் தூள் பறக்கும் 'துணிவு' பட புரமோஷன்..! மாஸ் காட்டும் ரசிகர்கள்..!
நடிகர் அஜித்தின் 'துணிவு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோசனை மலேசியாவை சேர்ந்த அஜித் ரசிகர்கள் இப்போதே துவங்கி விட்டனர். இது குறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக இயக்குனர் எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'துணிவு'. கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள, இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நடிகர் அஜித் தன்னுடைய டப்பிங் பணியையும் முடித்தார்.
இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், ஒரு சிறு இடைவெளிக்கு பின்பே மீண்டும் அவரது படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்கு முன்னதாக, மீண்டும் தன்னுடைய பைக் பயணத்தை தொடங்க உள்ளதாக சில தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் அஜித்தின் 'துணிவு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் பிரமோஷனை மலேசியாவில் உள்ள அஜித் ரசிகர்கள் இப்போதே துவங்கி விட்டனர்.
மலேசியன் அஜித் ஃபேன்ஸ் கிளப் ரசிகர்கள், துணிவு புட்சால் என்கிற புட்பால் போட்டி ஒன்றை நடத்தி, துணிவு படத்திற்கு வித்தியாசமாக புரமோஷன் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
மகாலட்சுமி செய்த செயல்..? போட்டோ போட்டு மானத்தை வாங்கிய கணவர் ரவீந்தர்..!