MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரம்மாண்டத்தின் உச்சம்..! பிரபாஸுக்கு 50 அடி கட்டவுட்.. பிரமிக்க வைக்கும் 'ஆதிபுருஷ்' ப்ரீ-ரிலீஸ் ஏற்பாடுகள்!

பிரம்மாண்டத்தின் உச்சம்..! பிரபாஸுக்கு 50 அடி கட்டவுட்.. பிரமிக்க வைக்கும் 'ஆதிபுருஷ்' ப்ரீ-ரிலீஸ் ஏற்பாடுகள்!

'ஆதிபுருஷ்' படத்தின்  ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிக்காக.. படக்குழுவினர் செய்து வரும் ஏற்பாடுகள் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jun 05 2023, 10:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிரபாஸ் நடித்து முடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி திருப்பதியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில்,  இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சியை நடத்த படக்குழு திட்டமிட்டு, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
 

25

பிரபாஸின் 'ஆதிபுருஷ்' திரைப்படம், இராமாயண புராண கதையை அடிப்படையாகக் கொண்டு, எடுக்கப்பட்டுள்ளது. ராமர் வேடத்தில், பாகுபலி நாயகன் பிரபாஸும், சீதாவாக பாலிவுட் நாயகி கிருத்தி சனோனும் நடித்துள்ளனர். ராவணனாக பாலிவுட் நடிகர் சைப் அலி கான் நடித்துள்ளார்.  ஓம் ரவுத் இயக்கியுள்ள இந்த படத்தை, பிரமாண்ட பட்ஜெட்டில் பூஷன் குமார் தயாரித்துள்ளார்.

சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியின் கவர்ச்சி களோபரம்! ஹாட் போட்டோஸ்!

35

'ஆதிபுருஷ்' திரைப்படம், ஜூன் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக நாளை திருப்பதியில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு படு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. 

45

பிரபாஸுக்கு 50 அடியில் கட்டவோ, மிகப்பெரிய மேடை, பார்வையாளர்களுக்கு அமர சேர்கள் போன்றவை மிகப்பெரிய இடங்களில் போடப்பட்டுள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் 100 நடனக் கலைஞர்களும், 100 பாடகர்களும் ஆதிபுருஷம் மற்றும் ராமாயணப் பாடல்களுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வை பிரசாந்த் வர்மா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'மாவீரன்' படத்தின் முக்கிய பணியை முடித்த சிவகார்த்திகேயன்! புகைப்படத்துடன் வெளியான தகவல்..!
 

55

நிகழ்ச்சியை தொகுப்பாளினி ஜான்சி தொகுத்து வழங்க உள்ளார். நாளை நடைபெறவுள்ள இந்த மிகப்பெரிய நிகழ்வின் வெற்றிக்காக ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களும் தயாராகி வருகின்றனர். மறுபுறம், இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக மற்றொரு டிரெய்லரும் வெளியிடப் போவதாகத் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பாலிவுட்
பிரபாஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Recommended image2
அப்பாடி.! அரண்மனை இப்படித்தான் இருக்குமோ?! திரும்பி பார்க்க வைக்கும் விஜய் தேவரகொண்டாவின் ஆடம்பர வீடு!
Recommended image3
சிவாஜிக்கு ஒரு குரல்.. எம்.ஜி.ஆருக்கு ஒரு குரல்! நடிகர்களுக்காகவே குரலை மாற்றிய டி.எம்.எஸ் - வியக்க வைக்கும் ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved