- Home
- Cinema
- Actor Prabhas : என்னதான் பிரச்சனை... 42 வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணல? - முதன்முறையாக மனம் திறந்த பிரபாஸ்
Actor Prabhas : என்னதான் பிரச்சனை... 42 வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணல? - முதன்முறையாக மனம் திறந்த பிரபாஸ்
பிரபாஸிடம் ரசிகர் ஒருவர், காதல் பற்றிய உங்களது கணிப்பு சரியாக இருக்காது என டிரைலரில் ஒரு வசனம் வருகிறது. நிஜ வாழ்க்கையில் காதல் பற்றிய உங்களது கணிப்பு எப்படி என கேட்டார்.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார் பிரபாஸ் (prabhas). இதையடுத்து இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவர் கைவசம் ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், ஸ்பிரிட், சலார் போன்ற படங்கள் உள்ளன.
இதில் ராதே ஷ்யாம் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja hegde) நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இது முழுக்க முழுக்க ரொமாண்டிக் படமாக உருவாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ராதே வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
ராதே ஷ்யாம் (Radhe Shyam) படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக பிரபாஸும், நடிகை பூஜா ஹெக்டேவும் மும்பையில் முகாமிட்டுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
அப்போது பிரபாஸிடம் ரசிகர் ஒருவர், காதல் பற்றிய உங்களது கணிப்பு சரியாக இருக்காது என டிரைலரில் ஒரு வசனம் வருகிறது. நிஜ வாழ்க்கையில் காதல் பற்றிய உங்களது கணிப்பு எப்படி என கேட்டார்.
இதற்கு சிரித்தபடி பதிலளித்த பிரபாஸ், காதல் பற்றிய எனது கணிப்புகள் எப்போதுமே தவறாகவே இருக்கும், அதனால் தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறினார். நடிகர் பிரபாஸுக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் ஏற்கனவே அனுஷ்காவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Bharathi kannamma : பகலில் சீரியல்... இரவில் இப்படியொரு வேலை - பாரதி கண்ணம்மா வினுஷாவின் மறுபக்கம்