ஓடிடிக்கு வரும் பாகுபலி நாயகனின் படம்..ஒரே மாதத்தில் வெளியாக ஆர் ஆர் ஆர் தான் காரணமா?
சூப்பர் ஸ்டார் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' திரைப்படம், OTT நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோக்களில் ஏப்ரல் முதல் தேதி ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

radhe shyam movie
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலம் பேன் இந்தியா நாயகனான பிரபாஸ்.சமீபத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் நடித்துள்ள படம் ராதே ஷ்யாம்.
radhe shyam movie
பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட இப்படம் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்தது.
radhe shyam movie
100 கோடி செலவில் செட் அமைக்கப்பட்டிருந்த இந்த படத்திலிலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்ததோடு ஹிட்டும் கொடுத்தது.
மேலும் செய்திகளுக்கு.. தொடரும் சல்மான் கான் மீதான பாலியல் புகார்கள்..முன்னாள் காதலியின் ட்விட்டால் மீண்டும் பற்றிய தீ..
Radhe Shyam
இதையடுத்து கடந்த மார்ச் 11-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ராதே ஷ்யாம் படம் ரிலீசானது.
radhe shyam movie
ஆக்ஷன் குறைவு என்ற காரணத்தால் தான் தெலுங்கை தவிர்த்து வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் இப்படம் கடும் தோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது..
radhe shyam movie
இதனால் படத்திற்கு செலவிடப்பட்ட பட்ஜெட்டில் முக்கால் பாகம் கூட திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது. இரண்டு வாரத்தில் ரூ.200 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
radhe shyam movie
தாயரிப்பாளரின் நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் பிரபாஸ் தனது ரூ.100 கோடி சம்பளத்தில் இருந்து பாதியை தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு.. மிஸ்டர் லோக்கல் நஷ்டம்..சிவகார்த்திகேயனுக்கு அபராதம்...தயாரிப்பாளரின் தடாலடி பதில் மனு
radhe shyam movie
இந்நிலையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீஸ் மற்றும் அதற்கான ஆதரவு பெருகியதால் காரணமாகவே ராதே ஷ்யாம் விரைவில் ஓடிடிக்கு போவதாக ஒரு பேச்சுண்டு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.