மிஸ்டர் லோக்கல் நஷ்டம்..சிவகார்த்திகேயனுக்கு அபராதம்...தயாரிப்பாளரின் தடாலடி பதில் மனு
மிஸ்டர் லோக்கல் படத்திற்காக பேசப்பட ரூ.15 கோடி சம்பளத்தில் ரூ.4 கோடியை தராமல் பாக்கி வைத்திருப்பதாகவும் சிவகார்த்திகேயன் தொடுத்த வழக்கிற்கு தயாரிப்பாளர் பதில் மனு அளித்துள்ளார்.

mr.local
வேலைக்காரனுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த படம் மிஸ்டர் லோக்கல்.
mr.local
காதல் ரோமன்ஸ் படமான இது கடந்த 2019 -ம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தை எம். ராஜேஷ் எழுதி இயக்கியுள்ளார்.
mr.local
கிட்டத்தட்ட ரூ.35 கோடியில் உருவான இந்த படம் மிக குறைவான வசூலை மட்டுமே ஈட்டியதோடு, மோசமான விமர்சங்களையும் சந்தித்தது.
mr local
இந்நிலையில் 4 வருடம் கழித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
mr.local
இப்படத்திற்கு சம்பளத் தொகையை முழுமையாக தராமல் ரூ.4 கோடி பாக்கி வைத்துள்ளதாக தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா மீது புகார் தெரிவித்துள்ளார்.
Mr Local
அதோடு பாக்கி தொகையை செலுத்தும் வரை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்து வரும் சிம்புவின் பத்து தல, விக்ரம் - பா.இரஞ்சித் படம் மற்றும் ஜிவி பிரகாஷின் ரிபெல் ஆகிய படங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
gnanavel raja
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தயாரிப்பாளர்ஞானவேல் ராஜாதாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும் இயக்குனர் ராஜேஷ், சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் அந்த படம் தயாரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
gnanavel raja
மேலும் உண்மை தகவல்களை மறைத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கோரியுள்ளார்.