MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பிரபாஸ்!

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பிரபாஸ்!

நடிகர் பிரபாஸ் 'தி ராஜா சாப்' படப்பிடிப்பின் போது காயமடைந்ததால், ஜப்பானில் நடைபெறவிருந்த 'கல்கி 2898 AD' படத்தின் புரோமோஷனில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 17 2024, 01:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Actor Prabhas Injured

Actor Prabhas Injured

பிரபல நடிகர் பிரபாஸ், 'தி ராஜ சாப்' படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார். சண்டைக் காட்சியில் நடிக்கும் போது இவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, பிரபாஸுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சில வாரங்கள் கட்டயமாக பிரபாஸ் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
 

26
Prabhas Met Accident in Raja Saab Shooting Spot

Prabhas Met Accident in Raja Saab Shooting Spot

எனவே, ஜப்பானில் அடுத்த மாதம் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள 'கல்கி 2898 AD' படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிரபாஸ் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பிரபாஸ் தன்னுடைய ரசிகர்களில் மனதார மன்னிப்பு கேட்டுள்ளார்.

19 வயது நடிகையுடன் தீரா காதல்! மனைவி லதாவை விவாகரத்து செய்ய துணிந்தாரா ரஜினிகாந்த்?
 

36
Prabhas Movie Kalki Box Office

Prabhas Movie Kalki Box Office

பிரபாஸ் நடித்து இந்த ஆண்டு ஜூன் மதம் 27 ஆம் தேதி வெளியான கல்கி 2898 AD  படத்தை, இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். வைஜந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ.600 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1200 கோடி வசூல் செய்தது. 
 

46
Kalki Part 2 Release

Kalki Part 2 Release

பிரமாண்டமாக உருவான இந்த படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், ஷோபனா, கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் அடுத்த பாகம் 2026-ல் வெளியாகும் என கூறப்படுகிறது. 

அந்த பாட்டுக்கு கவுண்டமணிக்கு குரல் கொடுத்த இசையமைப்பாளர் யார் தெரியுமா?
 

56
Prabhas Apologies to Fans

Prabhas Apologies to Fans

தமிழ் படங்களுக்கு மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், தற்போது கல்கி படத்தை
பிரபாஸ் காயம், படப்பிடிப்பில் காயமடைந்தார் பிரபாஸ், பிரபாஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு, தமிழ் சினிமா செய்திகள், கல்கி ஜப்பான் ரிலீஸ் மொழியில் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர். ஜனவரி 3-ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்காக பிரபாஸ் படக்குழுவினருடன் ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால், அங்கு செல்ல முடியாமல் போனதற்கு தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

66
Raja Saab Movie

Raja Saab Movie

இந்த படத்திற்கு முன்னர் தற்போது மருதி இயக்கும் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இந்த படத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். ஒரு பிரபாஸுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க இன்னொரு நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக சஞ்சய் தத் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் முரளி ஷர்மா, அனுபம் கீர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் சண்டை காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக படப்பிடிப்பு முடிவடைவதிலும், அடுத்தடுத்து இவர் நடிக்கும் படங்கள் துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல; அதற்குள் எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து இத்தனை பேர் விலகலா?
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Recommended image2
நடிகை அஞ்சுவின் கண்ணீர் பக்கங்கள்! 'கேளடி கண்மணி' நட்சத்திரத்தின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ரகசியம்!
Recommended image3
சிவப்பு மைசூர் சில்க் புடவை.. ஜொலிக்கும் தங்க மயில் நெக்லஸ்! ரிசப்ஷனில் தேவதையாய் மின்னிய ராஷ்மிகா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved