19 வயது நடிகையுடன் தீரா காதல்! மனைவி லதாவை விவாகரத்து செய்ய துணிந்தாரா ரஜினிகாந்த்?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் முன்னணி நடிகராக இருந்தபோது, பிரபல நடிகை ஒருவரை விரட்டி விரட்டி காதலித்ததாக, பழம்பெரும் நடிகை ஒருவர் கூறி உள்ள தகவல் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

Is Rajinikanth love with a 19-year-old actress? shocking Truth mma
ரஜினிகாந்த் நடித்து வரும் படங்கள்:

தன்னுடைய 74 வயதிலும், இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தன்னுடைய திரைப்படங்களில் ஆட்டம், பாட்டம், நடிப்பு என அனைத்திலும் கலக்கிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' திரைப்படம் வெளியாகி ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. நடிகர் அமீர் கான் உடன் ரஜினிகாந்த் நடிக்கக்கூடிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. மேலும் தன்னுடைய பிறந்தநாளை கூட ரஜினிகாந்த் கேரவனில் இருந்தபடி கொண்டாடிய வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

கௌசல்யா செந்தாமரை பகிர்ந்த தகவல்:

ரஜினிகாந்த் பற்றி என்ன செய்தி வெளியானாலும், அது மிகவும் பிரபலமாகி விடுகிறது. அந்த வகையில் பழம்பெரும் நடிகை மற்றும் நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா ரஜினிகாந்த் குறித்து சமீபத்தில் பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணனுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ள தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் விபத்து; வலியால் துடித்த போட்டியாளர் - அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி

Is Rajinikanth love with a 19-year-old actress? shocking Truth mma

நடிகர் ரஜினிகாந்த் திரை உலகில் உச்சத்தை அடைந்த பின்னர், பிரபல இளம் நடிகையுடன் இணைந்து நான்கு படங்கள் நடித்த போது... அந்த 19 வயது நடிகைக்கும், ரஜினிகாந்துக்கும் இடையே நெருக்கம் அதிகரித்ததாம்.  ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இந்த 19 வயது நடிகை கரம் பிடிக்க தயாராகும் அளவுக்கு சென்றதாக கூறப்பட்டது.

அமலாவுடன் ரஜினிகாந்துக்கு வந்த காதல்:

அந்த நடிகை வேறு யாருமல்ல பிரபல நடிகை அமலா தான்.  தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர். அமலா மற்றும் ரஜினிகாந்த் இணைந்து 1986 முதல் 1989 வரை, சுமார் நான்கு படங்களில் நடித்துள்ளனர். கோடை மழை படத்தில் முதல் முறையாக இருவரும் இணைந்து நடித்த போது, இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரியும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேலைக்காரன், கொடி பறக்குது, மாப்பிள்ளை, உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து இணைந்து நடித்தனர்.

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல; அதற்குள் எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து இத்தனை பேர் விலகலா?

Is Rajinikanth love with a 19-year-old actress? shocking Truth mma

அமலா - ரஜினிகாந்த் நடித்த 4 படங்கள்: 

கோடை மழை படத்திற்கு பின்னர் மீண்டும் இவர்கள் ஜோடி சேர்ந்த 'வேலைக்காரன்' படத்தில் நடித்த போது தான் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாம். அந்த படத்தில் நடிக்கும் போது அமலாவுக்கு 19 வயது.  ரஜினிகாந்த் 36 வயது ஏற்கனவே திருமணம் ஆகி இவருக்கு குழந்தைகளும் இருந்துள்ளது. அமலாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக, ரஜினிகாந்த் மனைவி லதா... சூப்பர் ஸ்டாரை விட்டு ஒரு வருடம் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தாராம். பின்னர் இது குறித்து லதா ரஜினிகாந்த், பாலச்சந்தருக்கு சொல்ல அவர் கண்டபடி திட்டி ரஜினியை மனைவியுடன் சேர்ந்து வாழ சொல்லியுள்ளார்.

கண்டித்த பாலச்சந்தர் - செந்தாமரை:

Is Rajinikanth love with a 19-year-old actress? shocking Truth mma

என் சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் நான் அல்ல! கோவில் அவமதிப்பு விவகாரம்; இளையராஜா விளக்கம்!

மேலும் ரஜினிகாந்த் பற்றிய தகவல் திரையுலகில் அதிகம் பேசப்பட்ட வந்த போது, ரஜினிகாந்துடன் பல படங்களில் வில்லனாகவும், அப்பா ரோல்களிலும் நடித்துள்ள செந்தாமரை... மிகவும் கோபமாக, நீ பண்ணுறது ரொம்ப தப்பு பா...  நீ எனக்கு படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, மரியாதையா போய் உன்னுடைய மனைவியை அழைச்சிட்டு வந்து வாழு என கூறி கண்டித்தாராம். இந்த சம்பவம் நடக்கும் போது தயாரிப்பாளர் முத்துராமனும் உடன் இருந்த நிலையில், ஒருமுறை இதை செந்தாமரையின் மனைவி கௌசல்யாவிடம் அவர் கூறியதாக இந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios