MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஷாக்கான நடிகர் அர்னவ்; BB வீட்டில் களமிறங்கும் பிரபல சீரியல் நடிகை அன்ஷிதா!

ஷாக்கான நடிகர் அர்னவ்; BB வீட்டில் களமிறங்கும் பிரபல சீரியல் நடிகை அன்ஷிதா!

Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செல்லமே நாடகத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை அன்ஷிதா போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

2 Min read
Ansgar R
Published : Oct 07 2024, 12:34 AM IST| Updated : Oct 07 2024, 06:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Anshida

Actress Anshida

தமிழக அளவில் டிஆர்பி-யில் மிகப்பெரிய உச்சங்களை தொட்ட ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். ஒரு வீட்டிற்குள் 100 நாட்கள் தங்க வைக்கப்படும் பிரபலங்களின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் பல கேமராக்கள் கொண்டு கண்காணிக்கும் ஒரு நிகழ்ச்சி தான் இது. மனிதனின் பல்வேறு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக தமிழைப் பொறுத்தவரை கடந்த 7 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடந்து வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தான் இதுவரை ஒளிபரப்பாகி வந்த ஏழு சீசன்களையும் வரிசையாக தொகுத்து வந்தார். இடையில் கமல்ஹாசன் ஓய்வில் சென்ற பொழுது, பிரபல நடிகர் சிம்பு கூட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை சில வாரங்கள் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil:களிமண்ணாக கெடந்தவன கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிட்டாங்க– முத்துக்குமரனின் பேச்சால் மெய்மறந்த VJS!
 

24
Kamal Haasan BB

Kamal Haasan BB

இந்த சூழலில் "ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு" என்கின்ற வகையில் பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். மக்களோடு மக்களாக மிகவும் எளிமையாக பழகும் குணம் கொண்ட விஜய் சேதுபதி இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உருவெடுத்துள்ளது மிகப்பெரிய வரவேற்புகளை பெற்று வருகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சுமார் 120 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதிக்கு இந்த முறை அதில் பாதி அளவில் தான் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது.

34
Kamalhaasan

Kamalhaasan

18 போட்டியாளர்கள் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் போட்டியிட உள்ளனர். 100 நாட்கள் கடந்து 106வது நாளில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதலிடம் பிடிப்பவருக்கு பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் வழங்கப்படும். இந்த முறை பங்கேற்றுள்ள 18 போட்டியாளர்களில் பாதிக்கும் அதிகமான புதிய முகங்கள் இடம் பெற்றுள்ளது பிக் பாஸ் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது என்று கூறினால் அது என்ன நிச்சயம் அறியல்ல.

44
Actress Anshida

Actress Anshida

அந்த வகையில் மலையாள மொழியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்திரை நாடகங்களில் நடித்து தன்னுடைய திறமையை வெளிக்கொணர்ந்து, தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமே என்கின்ற நாடகத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நடிகை அன்ஷிதா இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த எட்டாவது சீசனில் பங்கேற்று இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சுமார் 5 லட்சம் விசிறிகளை கொண்ட அவருக்கு இணைய வழியில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியா வந்தாலும்; கலகலப்பாக BB வீட்டில் என்ட்ரி கொடுத்த ஜாக்குலின் - ஆர்மி ஆரமிக்கப்படுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
விஜய் சேதுபதி
தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாலய்யாவின் மாஸ் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டாக இருந்ததா? அகண்டா 2 விமர்சனம் இதோ
Recommended image2
ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் களைகட்டிய சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் கொண்டாட்டம் - ரஜினியின் பர்த்டே கிளிக்ஸ் இதோ
Recommended image3
கொளுத்திப்போட்ட அறிவுக்கரசி... ஜனனியின் பிசினஸுக்கு வேட்டு வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved