Bigg Boss Tamil Season 8 :களிமண்ணாக கெடந்தவன செதுக்கிட்டாங்க– முத்துக்குமரனின் பேச்சால் மெய்மறந்த VJS!
Bigg Boss Tamil Season 8 Contestant Muthukumaran: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இல் 17ஆவது போட்டியாளராக முத்துக்குமரன் கலந்து கொண்டுள்ளார். சிறந்த பேச்சாளரான இவர், தனது திறமையால் பிக்பாஸ் வீட்டில் எப்படி சாதிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Bigg Boss Tamil Season 8 Contestant
Bigg Boss Tamil Season 8 Contestant Muthukumaran: விஜய் டிவியின் பிரமாண்டமான ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன்று கோலாகலமான தொடங்கியது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு ரூ.60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பங்கேற்றார்.
கடைசி போட்டியாளராக விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இடம் பெற்றார். இதற்கிடையில் 17ஆவது போட்டியாளராக மண்ணின் மைந்தன் அழகிய தமிழ் பேசும் முத்துக்குமரன் பங்கேற்றார். தமிழ் கடவுள் முருகப் பெருமானின் பெயரை கொண்ட முத்துக்குமரன் அழகிய தமிழ் பேசுவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது.
Muthukumaran Bigg Boss Tamil 8 Contestant
இவரைப் பற்றிய முழு விவரங்கள் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றாலும் காரைக்குடியில் பிறந்துள்ளார். தொகுப்பாளராக அறிமுகமான முத்துக்குமரன் தனது பேச்சுத்திறமையால் பல மேடைகளை கடந்து இன்று பிக்பாஸ் என்ற அழகான மேடை ஏறியுள்ளார். இந்த மேடையானது அவருக்கான வாய்ப்பை கொடுத்தாலும் அவருக்கென்று ஒரு அடையாளத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அழகிய தமிழ் மகன் என்று விஜய் சேதுபதியால் வரவேற்கபட்ட முத்துக்குமரன் தன்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க…இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். தமிழ் பேசுற பையன் என்ற அடையாளம் கிடைப்பதற்கு ரொமப்வே கஷ்டப்பட்டேன். ஆனால், இப்போது அந்த அடையாளமே பழம் என்றாகிவிட்டது. பழசு எல்லா பேசிக்கிட்டு, அரட்டை அடிச்சுக்கிட்டு இருப்பவன் போன்று.
Vijay Sethupathi Host Bigg Boss Tamil Season 8
தமிழ் பேசுவது என்பது என்னுடைய திறன் என்றால், எண்டர்டெயினர் என்பது என்னுடைய அடையாளம் என்பதை எப்படியாவது நிரூபிக்க வேண்டும். எந்தவொரு கலைஞனுக்குமே ஒரு நல்ல மேடை கிடைக்க வேண்டும். அப்படி யோசிக்கும் போது இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு கோடி மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க கூடிய ஒரு மேடையாக பிக்பாஸ் மேடை இருக்கிறது. இதை விட வேறு பெரிய மேடை இல்லை.
ஒருவனை பிரபலப்படுத்துவதும், பக்குவப்படுத்துவதும் ஒரு மேடை தான். அப்படி எனக்கு கிடைத்த பிக்பாஸ் மேடையை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு வந்திருக்கிறேன். சிவகங்கை மாவட்டம் கல்லல் என்ற ஊரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். வைராக்கியம் தான் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம் என்கிற அம்மா, சுயமரியாதை சுயரூபமாக இருக்கிற ஒரு அப்பா…இவர்களுடைய மகன் தான் முத்துக்குமரன்.
Muthukumaran, Bigg Boss Tamil 8
என்னுடைய அம்மாவின் அறிவுத் திறமையால் எனக்கு எல்லா புத்தகங்களையும் வாங்கி கொடுத்தாங்க… வாசிக்க சொன்னாங்க, ரேடியோ கேட்க வச்சாங்க… என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிஷத்தையும் செதுக்குனது என்னுடைய அம்மா தான் என்று சொல்லிக் கொண்ட முத்துக்குமரன் சம்பாதிக்கவே சென்னை வருகிறார். அவருக்கு தொகுப்பாளாராக வாய்ப்பு கிடைக்கிறது.
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சியின் மூலமாக சிறந்த பேச்சாளராக உருவெடுத்தார். பேச்சு ஒன்றை மையமாக வைத்து இவ்வளவு தூரம் டிராவல் செய்த முத்துக்குமரன் கடைசியாக வந்து நின்ற இடம் தான் பிக்பாஸ். அவரது கனவிற்கும் பயணத்திற்கும் சிறந்த இடமாக பிக்பாஸ் இருக்குமா? அல்லது அவரது பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்….
Bigg Boss Tamil Season 8, Muthukumaran Jegatheesan
கடைசியாக முத்துக்குமரன் சொன்ன ஒரு டயலாக் களிமண்ணாக கெடந்தவன கொஞ்சம் கொஞ்சமாக பிடிச்சு கைக்கும் வலிக்காம மண்ணுக்கும் வலிக்காம புடிச்சு புடிச்சு செதுக்கி இங்கு வந்து நிற்க வைத்திருக்கிறார்கள். இயல்பாக பேசிய முத்துக்குமரனை கண்டு மெர்சலான விஜய் சேதுபதி அவரது அம்மா கலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முத்துக்குமரனுக்கு பாராட்டு தெரிவித்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.