ஆடியோ லான்ச்சிலேயே மாஸ் காட்டும் 'பொன்னியின் செல்வன் 2' ! நேரு ஸ்டேடியத்தில் முண்டியடித்த ரசிகர்கள் கூட்டம்!
'பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீட்டு விழா, சற்று முன்னர் துவங்கிய நிலையில்... ரசிகர்கள் தற்போது வரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல, நேரு ஸ்டேடியம் முன்பு கார்த்திருப்பது இப்படத்தின் மீது அவர்களுக்கு உள்ள, எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.,
'பொன்னியின் செல்வன்' என்றதுமே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கல்கி தான். இந்த நாவலை வரலாற்று சான்றுகளை கொண்டு ஒரு புனையப்பட்ட கதையாக எழுதி இருந்தார்.
இவர் எத்தனையோ நாவல்களை எழுதி இருந்தாலும், பொன்னியின் செல்வன் எப்போதுமே சிறப்பு வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
பரபரக்கும் 'பொன்னியின் செல்வன் 2' ஆடியோ லான்ச் பணிகள்! லைட் வெளிச்சத்தில் மின்னும் மேடை..! போட்டோஸ்!
காரணம், நம் இந்தியாவின் நெற்களஞ்சியமாக இருக்கும் தஞ்சையில்.. அமைந்துள்ள பெரிய கோயிலை கட்டிய, ராஜராஜ சோழனை பற்றி எடுத்தும் கூறும் விதமாகவே 'பொன்னியின் செல்வன்' எழுதப்பட்டுள்ளது.
5 பாகங்களாக தொகுக்கப்பட்ட இந்த நாவலை, மிகவும் எளிமையான முறையில்... ஒரு படமாக எடுத்து ரசிகர்களுக்கு கொண்டு செல்ல, எம்.ஜி.ஆர், கமல் போன்ற ஜாம்பவான்கள் முயன்ற நிலையில் அது முடியாமல் போனது.
எனினும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் தடைகளை தாண்டி, இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய கனவு படமாக இப்படத்தை, இரண்டு பாகங்களாக இயக்கி முடித்துள்ளார். முதல் பாகத்தில் ஒரு சில நிறை.. குறைகள் இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
எனவே படத்தின் புரமோஷன் பணிகள் படு தூளாக நடந்து வரும் நிலையில், இன்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து வரும் நிலையில், ரசிகர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்க்கின்றனர் என்பது தற்போது நடந்து வரும் ஆடியோ வெளியீட்டு விழா மூலமே தெரிகிறது. ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் முன்பு முண்டியடித்து கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நின்று கொண்டிருந்தனர். இது குறித்த புகைப்படங்கள் இதோ..
நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு திருக்கடையூரில் நடந்த 70-வது ஷஷ்டியப்த பூர்த்தி! வைரலாகும் புகைப்படம்!