'பொன்னியின் செல்வன்' பெரிய பழுவேட்டரையர் - சின்ன பழுவேட்டரையர் தோற்றத்தில் மிரள வைத்த சரத்குமார் - பார்த்திபன்
'பொன்னியின் செல்வன் 1' படத்தின் டிரைலர் ரிலீஸ் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது... சரத்குமார் மற்றும் பார்த்திபனின் தோற்றம் வெளியாகியுள்ளது.
கல்கி எழுதிய, பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து, தற்போது இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக, 5 மொழிகளில் இயக்கியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன் 1'. சுமார் மூன்று வருடங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்த நிலையில், ஒருவழியாக முதல் பாகத்தின் பணிகள் முற்றிலும் முடிவடைந்து, செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.
படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக, அவ்வப்போது படக்குழு... சில முக்கிய தகவல்கள் மற்றும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்களின் தோற்றங்களையும் வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் தான், 'பொன்னியின் செல்வன்' படத்தின்... ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவின், தேதியை அறிவித்தது படக்குழு. அதன்படி வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது 'பொன்னியின் செல்வன் 1' படத்தில் சின்ன பழுவேட்டரையர் மற்றும் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடித்துள்ள சரத்குமார் மற்றும் பார்த்திபனின் தோற்றங்கள் வெளியாகியுள்ளது. இருவருமே மிகவும் கம்பீரமாக தற்போது வெளியாகியுள்ள போஸ்டர்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.