தொடரும் வசூல் வேட்டை.. விக்ரம் படத்தின் மொத்த கலெக்ஷனையும் இரண்டே வாரத்தில் தட்டித்தூக்கிய பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் விக்ரம் பட சாதனையை முறியடித்துள்ளது.
தமிழ் சினிமாவில் கனவு திரைப்படமாக இருந்த பொன்னியின் செல்வன், மணிரத்னத்தால் நனவாகி உள்ளது. அவர் இப்படத்தை எடுக்க 15 ஆண்டுகளாக போராடி வந்தார். இறுதியில் தற்போது தான் எடுத்து முடித்து, அதில் வெற்றியும் கண்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதோடு, வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.
இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் மற்றும் ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என அனைவரும் அந்த கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நேர்த்தியாக நடித்திருந்தனர். அதேபோல் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் கதையோடு ஒன்றி பயணிக்கும் வண்ணம் இருந்தது.
இதையும் படியுங்கள்... நயன்தாரா முதல் நாகார்ஜுனா வரை... சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர், நடிகைகள் லிஸ்ட் இதோ
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீசாகி இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், தொடர்ந்து திரையரங்குகளில் சக்சஸ்புல்லாக ஓடி வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படம் கமலின் விக்ரம் பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது. கமல் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் ரிலீசாகி மொத்தமாக ரூ.426 கோடி வசூலித்திருந்தது.
தற்போது பொன்னியின் செல்வன் அதனை முறியடித்து அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. முதலிடத்தில் ரஜினியின் 2.0 திரைப்படம் உள்ளது. இப்படம் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலிலும் பொன்னியின் செல்வன் முதல் இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.190 கோடி வசூலித்து கமலின் விக்ரம் திரைப்படம் முதலிடத்தில் உள்ள நிலையில், தற்போது வரை ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் விக்ரம் சாதனையை முறியடித்து நம்பர் 1 இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சீரியல் நடிகை திவ்யா வழக்கு..தலைமறைவான கணவர் அர்னவ்?