- Home
- Cinema
- ஆடம்பரமாக நடந்த 'பொன்னியின் செல்வன் 1' பட வெற்றிவிழா..! ஸ்டைலிஷாக வந்த கார்த்தி, ஜெயம் ரவி புகைப்பட தொகுப்பு!
ஆடம்பரமாக நடந்த 'பொன்னியின் செல்வன் 1' பட வெற்றிவிழா..! ஸ்டைலிஷாக வந்த கார்த்தி, ஜெயம் ரவி புகைப்பட தொகுப்பு!
'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இன்று 'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றி விழா கோலாகலமாக நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இதோ...

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான 'பொன்னியின் செல்வன்' சுமார் 3 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பின்னர் இரண்டு பாகங்களாக தயாரான நிலையில், இந்த படத்தின் முதல் பாகம், பல்வேறு... எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த செப்டம்பர் மாதம் பிரமாண்டமாக வெளியானது.
அமரர் கல்கி, தென்னகத்தை ஆண்ட சோழ மன்னர்கள் பற்றிய வரலாற்றை புனையப்பட்ட கதையாக எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை எம்ஜிஆர், கமல்ஹாசன் போன்ற பல ஜாம்பவான்கள் படமாக இயக்க முயற்சித்த நிலையில், சில காரணங்களால் அது முடியாமல் போனது.
ஆனால் ஒரு வழியாக, இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார் மணிரத்தினம். 'பொன்னியின் செல்வன்' நாவல் விரும்பிகள் பலர், இந்த படத்தை முதல் நாளே திரையரங்கிற்கு வந்து கண்டுகளித்த நிலையில், கதையில் இடம்பெற்ற சம்பவங்கள் பல மிஸ்ஸாவதாக நெகடிவ் விமர்சனத்தை முன் வைத்தனர்.
அதே நேரம், சுமார் 5 பாகங்கள்... 2000-யிரம் பக்கங்களை கொண்ட ஒரு கதையை படமாக எடுப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம், அதனை மிகவும் நேர்த்தியாக மணிரத்தினம் செய்துள்ளார் என பாசிட்டிவ் விமர்சனங்களும் எழுந்தது.
ஆரம்பமே அமர்களம்... பிரம்மாண்டமாக நடந்த ‘லால் சலாம்’ படத்தின் பூஜை - வைரலாகும் போட்டோஸ் இதோ
கலவையான விமர்சனங்களோடு... தற்போது வரை, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது.
மேலும் இயக்குனர் மணிரத்னம், இந்த படத்திற்காக தேர்வு செய்துள்ள அனைத்து கதாபாத்திரங்களுமே கதைக்கும், கேரக்டருக்கும் பொருத்தமாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்தது.
தற்போது படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், இன்று இந்த படத்தின் சக்ஸஸ் மீட் மற்றும் தேங்க்ஸ் மீட் பிரமாண்டமாக நடந்துள்ளது. இதில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குனர் மணிரத்னம், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, உள்ளிட்ட படக்குழுவினர்... பத்திரிக்கையாளர்கள் போன்ற பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பொன்னியின் செல்வன் பட நாயகர்கள் அனைவரும்... ஸ்டைலிஷ் லுக்கில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை, படக்குழு ஏப்ரல் மாதம் வெளியிட தயாராகி வருவதாகவும், இந்த படத்தின் பணிகள் துரிதமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.