பொன்னியின் செல்வன் படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டுமே இத்தனை கோடியா? செம்ம ஷாக்கில் திரையுலக வட்டாரம்!
'பொன்னியின் செல்வன்' படத்திற்கு இருக்கும் வரவேற்பை கண்டு, இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம், மிக பிரமாண்டமாக இயக்கியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின், அப்டேட் அவ்வப்போது வெளியாகி வருகிறது. மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது. ஓவ்வொரு கதாபாத்திரத்தையும் படத்திற்கு ஏற்ற போல் கச்சிதமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், இந்த படத்தின் வெளிநாட்டு டிஸ்ட்ரிபியூஷன் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது. அவவ்போது இதுகுறித்த தகவல்களை, பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை பற்றிய தகவல் தான் வெளியாகி திரையுலக வட்டாரத்தையே செம்ம ஷாக் ஆக்கியுள்ளது.
மேலும் செய்திகள்: SIIMA விருது விழாவில்... அரபிக்குத்து பாடலுக்கு மேடையில் ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டே..! வைரலாகும் வீடியோ!
இது வரை, எந்த படத்தையும் வாங்கிடாத மிகப்பெரிய தொகைக்கு 'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களின் டிஜிட்டல் உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் ரூபாய் 125 கோடிக்கு இப்படத்தின் டிஜிட்டல் உரிமை வியாபாரம் ஆகியுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். காரணம் இதுவரை எந்த படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது இல்லையாம்.
டிஜிட்டல் உரிமையை அடுத்து இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் செய்திகள்: இந்த விஜய் டிவி சீரியலுக்கு ரசிகையாக மாறிய அனுஷ்கா.! சீரியல் ஹீரோ - ஹீரோயினுக்கு போனில் வாழ்த்து! வைரல் வீடியோ
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பது.