தமிழ் சினிமா வரலாற்றில் எந்த திரைப்படமும் செய்திராத மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன்
Ponniyin selvan : மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் மணிரத்னம். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், பூங்குழலியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும், நந்தினியாக நடிகை ஐஸ்வர்யா ராயும், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜும், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராமும் நடித்திருந்தனர்.
இதையும் படியுங்கள்... தேசிய விருதுடன் கியூட் போஸ் கொடுத்த தியா - தேவ்... சூர்யா பேமிலியின் ஹாப்பி கிளிக்ஸ் இதோ
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இப்படம் முதல் நாளில் வசூலை வாரிக் குவித்து உள்ளது.
அதன்படி இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை ரிலீசான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனையை பொன்னியின் செல்வன் படைத்துள்ளது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் இதுவரை ரிலீசான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... வெயில் துவங்கி யானை வரை.. தேசிய விருது நாயகன் ஜிவி பிரகாஷின் இசை பயணம்