‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்... கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம் என்ன தெரியுமா?
த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரகாஷ்ராஜ், ஜெய்ராம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் என்னென்ன கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ponniyin selvan
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் விக்ரம், ஜெய்ராம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, அஸ்வின், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. டெக்னிக் சையிலும் இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவிற்கு ரவிவர்மன், கலைக்கு தோட்டாதரணி என ஜாம்பாவன்கள் டீம் களமிறங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும், இன்னும் அதிகரித்துள்ளது.
ponniyin selvan
அதிலும் குறிப்பாக மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கியுள்ளதால் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரகாஷ்ராஜ், ஜெய்ராம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் என்னென்ன கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ponniyin selvan
தற்போது வெளியாகியுள்ள பட்டியலும், ரசிகர்கள் ஏற்கனவே சோசியல் மீடியாவில் யூகித்த பட்டியலும் கிட்டதட்ட ஒத்துப்போகிறது. பெரும்பாலான ரசிகர்கள் கேஸ் செய்தது போலவே பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிப்பது உறுதியாகியுள்ளது. சுந்தர சோழ அரசரின் தலைமை தளபதியான பெரிய பழுவேட்டரையரின் மனைவியாக தான் நந்தினி கதாபாத்திரத்தி ல் ஐஸ்வர்யா நடிப்பது குறிப்பிடத்தக்கது.
ponniyin selvan
தஞ்சை கோட்டையை காவல்காக்கும் தளபதி சின்ன பழுவேட்டரையர் என்கிற காலாந்தகக் கண்டர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.
ponniyin selvan
சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், ஆழ்வார்க்கடியனாக ஜெயராம் நடிக்கின்றனர்.
ponniyin selvan
சுந்தர சோழ மகாராஜாவின் மகளும், ஆதித்ய கரிகாலன் மற்றும் பொன்னியின் செல்வனின் சகோதரியுமான குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார்.
ponniyin selvan
சுந்தர சோழன் மகாராஜாவின் மூத்த மகனும், பொன்னியின் செல்வன், குந்தவையின் அண்ணனுமான ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் சியான் விக்ரம் நடிக்கிறார்.
ponniyin selvan
பொன்னியின் செல்வன் கதை நாயகனாகவும், அருள் மொழிவர்மன் எனும் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார்.
ponniyin selvan
வாணர குல வீரன் வந்தியத் தேவனாக கார்த்தி நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆதித்ய கரிகாலனின் தூதுவனும், குந்தவையின் காதலனும் வந்தியத் தேவனே ஆவார்.
ponniyin selvan
மணிரத்னத்தின் ஃபேவரைட் ஹீரோயினான ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. பெரிய பழுவேட்டரையருக்கு மனைவியான இந்த கதாபாத்திரம் தான் வில்லியாக செயல்பட்டு ராஜ்ஜியத்தை அழிக்க முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.