MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சமந்தாவின் மாஜி கணவருடன் காதலா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா

சமந்தாவின் மாஜி கணவருடன் காதலா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நடிகர் நாகசைதன்யாவை, பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலா காதலிப்பதாக வதந்தி பரவி வந்தது.

2 Min read
Author : Ganesh A
Published : May 09 2023, 09:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தாவும், நாக சைதன்யாவும் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகர் நாக சைதன்யா தொடர்ந்து காதல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில், அவர் பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.

24

இதனை உறுதி செய்யும் விதமாக சோபிதாவும், நாக சைதன்யாவும் லண்டனில் ஜோடியாக சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இருப்பினும் இந்த காதல் சர்ச்சை குறித்து நாக சைதன்யாவும், சோபிதாவும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்தனர். அவர்கள் அமைதியாக இருந்தாலும், அவர்களைப் பற்றிய காதல் சர்ச்சை தொடர்ந்து காட்டுத்தீ போல் பரவி வந்தன. இதனால் வேறுவழியின்றி முதன்முறையாக காதல் சர்ச்சை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் சோபிதா.

இதையும் படியுங்கள்... கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்ற குட்டி நயன் அனிகா சுரேந்திரன்... வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்


 

34

அவர் கூறியதாவது : “என்னைப் பற்றிய காதல் வதந்திகள் பரவி உள்ளன. யார் யாரோ ஏதேதோ சொல்கிறார்கள் என்று அதையெல்லாம் நான் கண்டுகொள்வதும் இல்லை. அதற்காக வருத்தப்பட்டும் பிரயோஜனம் இல்லை. அந்த வதந்திக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாதபோது அதற்கு அவசர அவசரமாக பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எந்த தவறும் செய்யாதபோது, எதற்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. என் வேலையை நான் பார்க்க போகிறேன்” என கூறியுள்ளார்.

44

மறுபுறம் சமந்தாவை நாக சைதன்யா பிரிந்ததற்கு சோபிதா உடனான காதல் தான் காரணம் எனவும் வதந்திகள் பரவி வந்தன. இதற்கு சமீபத்திய பேட்டியில் மறுப்பு தெரிவித்துள்ள நாக சைதன்யா, இருவருக்கு இடையேயான பிரச்சனையில் மூன்றாவது நபரை இழுப்பது சரியல்ல என்று கூறினார். இதன்மூலம் தங்களைப்பற்றிய காதல் வதந்திக்கு சோபிதாவும், நாக சைதன்யாவும் அடுத்தடுத்து பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் அசீமுக்கு அடித்த ஜாக்பார்ட்! சூப்பர் ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில்... ஹீரோ அவதாரம் எடுக்கிறார்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நாக சைதன்யா
சமந்தா ரூத் பிரபு
சோபிதா துலிபாலா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Recommended image2
மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image3
தன்னைவிட 13 வயது மூத்த நடிகருடன் காதல்; நின்றுபோன ராஷ்மிகாவின் முதல் திருமணம் பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved