MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இனி சோசியல் மீடியா பக்கம் தலைகாட்டவே மாட்டேன்... தடாலடியாக அறிவித்த ஐஸ்வர்யா லெட்சுமி - காரணம் என்ன?

இனி சோசியல் மீடியா பக்கம் தலைகாட்டவே மாட்டேன்... தடாலடியாக அறிவித்த ஐஸ்வர்யா லெட்சுமி - காரணம் என்ன?

Aishwarya Lekshmi : நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி தான் சமூக வலைதளங்களில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருக்கிறார். அதற்கான காரணத்தையும் அவர் கூறி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 13 2025, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Aishwarya Lekshmi Quits Instagram
Image Credit : our own

Aishwarya Lekshmi Quits Instagram

நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி சமூக வலைதளங்களை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். வேலைக்காக பயன்படுத்தத் தொடங்கிய சமூக வலைதள தன்னை கட்டுப்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டதாகவும், அது தனது சிந்தனை, மொழி, மகிழ்ச்சி போன்றவற்றை பாதித்ததாகவும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளத்தை விட்டு விலகும் முடிவை நீண்ட நாட்களாக யோசித்து வந்ததாகவும், இன்ஸ்டாகிராமில் இல்லாதவர்களை மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதை அறிந்திருந்தும் அந்த ஆபத்தை ஏற்க உள்ளதாகவும் ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
சமூக வலைதளங்களுக்கு கல்தா
Image Credit : instagram

சமூக வலைதளங்களுக்கு கல்தா

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : "சமூக வலைதளம் என்னுடைய வேலைக்கும் ஆராய்ச்சிக்குமான வழியைத் தவறிவிட்டது. என்னுடைய சிந்தனைகளையும் மொழியையும் அது தீய வகையில் பாதித்துள்ளது. என் மகிழ்ச்சிகளையும் அது அழித்துவிட்டது. சமூக ஊடகத்தின் தீமைகளைப் புரிந்துகொள்ளப் பெரும் முயற்சி மேற்கொண்டேன். சமூக வலைதளத்தை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் பல நாள்களாக இருந்ததாகவும், இன்ஸ்டாகிராமில் இல்லாதவர்களை மக்கள் மறந்து விடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அந்த ஆபத்தை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Articles

Related image1
திருமணமே வேண்டாம்; முரட்டு சிங்கிளாக இருக்க முடிவெடுத்த ஐஸ்வர்யா லட்சுமி - காரணம் என்ன?
Related image2
புது கார் வாங்கிய ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி! தக் லைஃப் நாயகி வாங்கிய காஸ்ட்லி காரின் விலை எவ்வளவு தெரியுமா?
34
அன்பை வழங்க மறந்து விடாதீர்கள்
Image Credit : our own

அன்பை வழங்க மறந்து விடாதீர்கள்

"எனக்குள் இருக்கும் கலைஞனையும், சிறுமியையும் காப்பாற்றுவதற்காக இணையத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ளேன். இதன்மூலம் அர்த்தமுள்ள உறவுகளையும் சினிமாவையும் வாழ்க்கையில் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். நல்ல திரைப்படங்கள் செய்தால் அன்பை வழங்க மறந்து விடாதீர்கள்," என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். நேற்று நடிகை அனுஷ்கா ஷெட்டி சமூக வலைதளங்களில் இருந்து விலக முடிவெடுத்திருந்த நிலையில், இன்று நடிகை ஐஸ்வர்யா லெட்சுமியும் அதே முடிவை எடுத்திருக்கிறார்.

44
ஐஸ்வர்யா லெட்சுமி திரைப்பயணம்
Image Credit : our own

ஐஸ்வர்யா லெட்சுமி திரைப்பயணம்

நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி தமிழில் சுந்தர் சி இயக்கிய ஆக்‌ஷன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த அவர், அடுத்ததாக தனுஷுடன் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் அவருக்கு கைகொடுக்காவிட்டாலும், இதையடுத்து அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி ஐஸ்வர்யா லெட்சுமியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா, தற்போது அவர் நடிப்பில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் தயாராகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
தமிழ் நடிகைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Related Stories
Recommended image1
திருமணமே வேண்டாம்; முரட்டு சிங்கிளாக இருக்க முடிவெடுத்த ஐஸ்வர்யா லட்சுமி - காரணம் என்ன?
Recommended image2
புது கார் வாங்கிய ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி! தக் லைஃப் நாயகி வாங்கிய காஸ்ட்லி காரின் விலை எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved