மனைவியுடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்த நடிகர் ஜெயராம்! வைரலாகும் புகைப்படம்!
'பொன்னியின் செல்வன்' பட நடிகர், ஜெயராம் சித்திரை மதத்தை முன்னிட்டு சபரிமலைக்கு தன்னுடைய மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மலையாள திரையுலகின், முன்னணி நடிகரான ஜெயராம், தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர். இவரை தொடர்ந்து... இவரின் மகன் காளிதாஸ் ஜெயராம், தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். கடைசியாக இவர், நடிகர் கமல்ஹாசனுக்கு மகனாக நடித்த 'விக்ரம்' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதை தொடர்ந்து, மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து 'இந்தியன் 2' படத்திலும் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார் என்பதை சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
மகன் தமிழ் சினிமாவில் ஒரு புறம் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நிலையில், அவரின் தந்தை ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்க கூடிய படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 'பொன்னியின் செல்வன்' கதையில் வரும், ஆழ்வார்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் நந்தினியின் சகோதரர் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்த்தக்கது.
திரில்லர் ஜார்னரில்... உருவாகும் 'போர் தோழி' ! இளம் நடிகரோடு கை கோர்த்து மிரட்ட வரும் சரத்குமார்!
முதல் பாகத்தில், ஜெயராம் மற்றும் கார்த்தியின் காம்பினேஷன் சீன்கள்... மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. எனவே இரண்டாம் பாகத்திலும் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்க கூடிய ஒன்றாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வெளியாக இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், படம் வெற்றிபெறவும்... சித்திரை மாதத்தை முன்னிட்டும் நடிகர் ஜெயராம் தன்னுடைய மனைவி, பார்வதியுடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படத்தை ஜெயராம் தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான போது நடிகர் ஜெயராம், ஜெயம் ரவி, விக்னேஷ் சிவன் மற்றும் நண்பர்கள் சிலருடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு சென்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
கேரள புடவையில் கும்முனு இருக்கும் நயன்தாரா.! விக்னேஷ் சிவனுடன் விஷு கொண்டாடிய லேட்டஸ்ட் போட்டோஸ்!