ராஜு முருகன் இயக்கத்தில்... இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி! வெளியான லேட்டஸ்ட் தகவல்!
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் கார்த்தி, இதுவரை ஏற்காத வித்தியாசமான வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழ் திரையுலகில் தரமான படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை, 'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி' ஆகிய படத்தை இயக்கிய இயக்குவர் ராஜு முருகன் இயக்குகிறார்.
இதில் நடிகர் கார்த்தி, இதுவரை கார்த்தி ஏற்காத புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இதற்கான ஒத்திகை மற்றும் பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்: வாயில் டின்னுடன்... டீப் நெக் உடையில்... தொடை முழுவதையும் காட்டி.. உச்ச கவர்ச்சியில் ஷிவானி கொடுத்த கூல் போஸ்!
இதனிடையே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'வந்திய தேவன்' கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 6-ந் தேதி 'பொன்னியின் செல்வன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாகவும், அவர் தான் அன்றைய நிகழ்வில் பொன்னியின் செல்வன் பட டிரைலரை வெளியிட இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: தங்கை நதியாவின் திருமண புகைப்படங்களை பகிர்த ஆண்ட்ரியா..! கல்யாணத்தில் கூட கவர்ச்சி உடையில் கலக்குறாங்களே!
ponniyin selvan teaser evend photos
பொன்னியின் செல்வன் படத்தின் வால் பிடித்து சண்டை போடும் காட்சியில் கூட, கார்த்தி டூப் போடாமல் நடித்து பட குழுவினரின் பாராட்டை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விருமன்' திரைப்படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் பொன்னியின் செல்வன் திரைப்படமும், இதை தொடர்ந்து அக்டோபர் மாதம் 'சர்தார்' படமும் வெளியாக உள்ளது.
மேலும் செய்திகள்: ரத்தம் வரும் அளவிற்கு உதவி இயக்குனரை தாக்கிய சீரியல் நடிகர்... படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு..!
தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்திலும் யாரும் எதிர்பாராத கெட்டப்பில் நடித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துவார் என படக்குழு தெரிவித்துள்ளது குறிபிடத்தக்கது.