MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Mumtaj : நடிகை மும்தாஜ் வீட்டில் டார்ச்சர் தாங்க முடியல... பணிப்பெண் பகீர் புகார் - போலீசார் தீவிர விசாரணை

Mumtaj : நடிகை மும்தாஜ் வீட்டில் டார்ச்சர் தாங்க முடியல... பணிப்பெண் பகீர் புகார் - போலீசார் தீவிர விசாரணை

Actress Mumtaj : மும்தாஜ் வீட்டு பணிப்பெண்ணான முக்தீன், இன்று காலை காவல்துறையின்‌ அவரச உதவி எண்ணான 100க்கு தொலைபேசி மூலம் அழைத்து புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

1 Min read
Author : Ganesh A
Published : May 11 2022, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்  மும்தாஜ். இதையடுத்து குஷி, ஸ்டார், ரோஜாக்கூட்டம், ராஜாதி ராஜா என பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் ஷாரிக், தாடி பாலாஜியின் மனைவி நித்யா ஆகியோருடன் மும்தாஜ் சண்டையிட்டது பரபரப்பாக பேசப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

நடிகை மும்தாஜ், அண்ணாநகர் H பிளாக் 2வது தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்தீன் மற்றும் அவரது சகோதரி நடிகை மும்தாஜ் வீட்டில் கடந்த 6 வருடமாக வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளனர்.

34

இந்நிலையில், மும்தாஜ் வீட்டு பணிப்பெண்ணான முக்தீன், இன்று காலை காவல்துறையின்‌ அவரச உதவி எண்ணான 100க்கு தொலைபேசி மூலம் அழைத்து புகார் ஒன்றை அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து உடனடியாக, நடிகை மும்தாஜின் வீட்டிற்கு விரைந்து வந்த அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய போலீசார், புகார் கொடுத்த பெண்ணிடம் விசாரணை நடத்தி உள்ளனர். 

44

அப்போது அவர் தான் அந்த வீட்டில் இருக்க முடியாது எனவும், அங்கு தனக்கு கொடுமைகள் நடப்பதாகவும் கூறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை போலீசார் அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அரசு காப்பகத்தில் உள்ள அந்தப் பெண்ணிடம் குழந்தைகள் நல குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... Dhanush : நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி... இதெல்லாம் நான் கனவுல கூட எதிர்பாக்கல - தனுஷ் ஹாப்பியோ ஹாப்பி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Drishyam 3 : கருப்பு சூர்யாவை விடுங்க.. பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட வரும் ஜார்ஜ்குட்டி.. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்
Recommended image2
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Recommended image3
Actress with Chief Ministers: அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved