பிச்சைக்காரன் அம்மாவா இவங்க?..படத்தில் மில் ஓனர்..உண்மையில் அமெரிக்க தொழிலதிபர்
பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு அம்மாவாக நடித்திருந்த தீபாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Dheepa Ramanujam
இயக்குனர் சசி இயக்கத்தில் உருவான படம் பிசைக்காரன். இசையமைப்பாளராக இருந்து நாயகராக உருவெடுத்துள்ள விஜய் ஆண்டனி தனது மாறுபட்ட பதிப்பை இந்த படத்தில் கொடுத்திருந்தார்.
Dheepa Ramanujam
இந்த படத்தில் சாட்னா டைட்டஸ் நாயகியாகவும், பகவதி பெருமாள் , வழக்கு என் முத்துராமன் மற்றும் தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Dheepa Ramanujam
விஜய் ஆண்டனியின் சொந்த தயாரிப்பான பிலிம் கார்ப்பரேஷன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார்.
Dheepa Ramanujam
2016 -ல் வெளியிடப்பட்ட இந்த படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிச்சகாடு என்று பெயரிடப்பட்டு கஅதே ஆண்டு வெளியிடப்பட்டது.
Dheepa Ramanujam
அதோடு 2017 ஆம் ஆண்டில், இப்படம் ஹிந்தியில் ரோட்சைடு ரவுடி, ஒடியாவில் பேபி , மராத்தியில் பிகாரி , கன்னடத்தில் அம்மா ஐ லவ் யூ என்றும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
Dheepa Ramanujam
இந்த படத்தில் நாயகனான அருள் செல்வகுமார் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பணக்கார தொழிலதிபர்.. அவரது தாயார் புவனேஷ்வரி, கணவரின் மரணத்திற்கு பிறகு கடின உழைப்பால் ஜவுளி துறையில் முன்னணி தொழிலதிபராக உருவாகிறார்.
Dheepa Ramanujam
தாயுள்ளம் கொண்ட புவனேஸ்வரி தன்னிடம் வேலை செய்யும் பணியாளர்களிடம் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். இவருக்கு திடீர் விபத்து ஏற்பட, அம்மாவை காப்பாற்ற விஜய் ஆண்டனி பிசைக்காரனாக மாறி அதன் மூலம் கிடைக்கும் காசுகளை உண்டியலில் போட்டு வேண்டிக்கொள்ள அம்மா பிழைக்கிறார்.
Dheepa Ramanujam
அம்மா, மகன் பாசத்தால் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்த பிச்சைக்காரனில் அம்மாவாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் நடிகை தீபா ராமானுஜம். இவர் தற்போது அமெரிக்காவில் உள்ளார்.
Dheepa Ramanujam
அருணாச்சலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக இருந்து அம்மா, அத்தை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவில் தொழில் அதிபராக வலம் வருகிறார் தீபா.