MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இளையராஜாவிடம் சேர் வாங்ககூட காசில்லையா? லட்சுமி ராமகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருந்த போட்டோவால் வெடித்த சர்ச்சை

இளையராஜாவிடம் சேர் வாங்ககூட காசில்லையா? லட்சுமி ராமகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருந்த போட்டோவால் வெடித்த சர்ச்சை

Lakshmy Ramakrishnan : இளையாராஜா முன் லட்சுமி ராமகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள், ஏன் அவரிடம் சேர் வாங்க கூட காசில்லையா என விமர்சித்து வருகின்றனர்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Aug 17 2022, 01:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழில் பல படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்கிற ரியாலிட்டி ஷோ மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனார். குறிப்பாக இதில் அவர் பேசிய என்னம்மா நீங்க இப்படி பண்றீங்கலேமா என்கிற டயலாக் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இதை வைத்து பாடலே உருவாகும் அளவுக்கு டிரெண்ட் ஆனது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இவர் நடிகையாக மட்டுமின்றி சினிமாவில் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இவர் இயக்கத்தில் இதுவரை ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இதில் குறிப்பாக அவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்தது.

35

இந்நிலையில், தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக விருமாண்ட பட ஹீரோயின் அபிராமி நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் மிஷ்கின் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... வரவர கிளாமர் தூக்குதே...சேவல் பட நாயகி பூனம் பஜ்வாவின் லோ நெக் போட்டோஸ்...

45

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் இசைப் பணிகளுக்காக இசைஞானி இளையராஜாவை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த புகைப்படத்தில் இளையாராஜா முன் லட்சுமி ராமகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் கோபமடைந்தனர்.

55

ஏன் இளையராஜாவிடம் சேர் வாங்க கூட காசில்லையா என ஒருவர் கேட்க, மற்றொருவர் அவங்களுக்கு சேர் கொடுத்தா கொறஞ்சி போயிடுவாரு, சக மனிதர்களுக்கு மதிப்பளிக்க தெரியாத மனிதன் இளையராஜா என்று விமர்சித்து பதிவிட, இதைப்பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன், இளையராஜா கடவுளுக்கு நிகரானவர், அவர் காலடியில் அமர்ந்திருப்பதை நான் பாக்யமாக கருதுகிறேன். மேலும் தரையில் அமர்வது உடலுக்கு நல்லது. அதனை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கு - நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்ப்பு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இளையராஜா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved