- Home
- Cinema
- Peddi vs Karuppu Box Office : ஒரே வாரத்தில் கருப்பு பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய பெத்தி
Peddi vs Karuppu Box Office : ஒரே வாரத்தில் கருப்பு பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய பெத்தி
Peddi Beat Karuppu Box Office Record : சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட கருப்பு திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் சாதனையை பெத்தி முறியடித்து உள்ளது.

Peddi Beat Karuppu Box Office Record
ராம் சரண் நடிப்பில் வெளியான பான்-இந்தியன் படமான 'பெத்தி', பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் படி, இந்தப் படம் ரிலீஸ் ஆகி 7 நாட்களில் உலகளவில் ரூ.345 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் இதன் நெட் கலெக்ஷன் ரூ.187.31 கோடி. ராம் சரணின் சினிமா வாழ்க்கையிலேயே இது ஒரு மிகப்பெரிய சோலோ ஹிட்டாக அமையப்போகிறது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த கருப்பு திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலை ஒரே வாரத்தில் வாரிக்குவித்துள்ளது பெத்தி. இதற்கிடையே, படத்தின் இயக்குநர், ஹீரோயினை ஒரு போகப் பொருளாக சித்தரித்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது. பல நடிகைகள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர்.
பெத்தி பட வசூல் சாதனை
முதல் இரண்டு நாட்களில் ரூ.181 கோடி வசூலித்த இந்த படம், மூன்றாவது நாளில் மட்டும் உலகளவில் ரூ.55 கோடி வசூலித்தது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஓவர்சீஸ் வசூலிலும் படம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் தமிழ் மற்றும் மலையாளப் பதிப்புகளை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற புச்சி பாபு சனா இயக்கிய இந்தப் படத்தை, வ்ருத்தி சினிமாஸ் பேனரில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து இந்த மெகா பட்ஜெட் படத்தை வழங்கியுள்ளனர்.
ராம்சரணுக்கு குவியும் பாராட்டு
ரிலீஸ் ஆன முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் முக்கியமாகப் பேசப்படுவது ராம் சரணின் நடிப்புதான். இந்தப் படத்திற்காக அவர் தனது உடலை பெருமளவில் மாற்றி, தன் கரியரிலேயே சிறந்த நடிப்பைக் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். படத்தின் டைட்டில் கேரக்டரான 'பெத்தி'யாக தான் ராம் சரண் நடித்துள்ளார். கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராம் சரணும் சிவராஜ்குமாரும் முதல் முறையாக இந்தப் படத்தில் தான் இணைந்து நடித்துள்ளனர்.
பெத்தி படக்குழு
ராம் சரணின் நடிப்புக்கு இணையாக, ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் பெரிய அளவில் பாராட்டப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில் ஆக்ஷன், டிராமா, ரொமான்ஸ், த்ரில், எமோஷனல் காட்சிகள் என அனைத்தும் உள்ளன. அதுமட்டுமின்றி, கிரிக்கெட், மல்யுத்தம், ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தான் படத்தின் ஹீரோயின். இவர்களுடன் பாலிவுட் நடிகர் திவ்யேந்து ஷர்மா, ஜெகபதி பாபு, போமன் இரானி போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் பான்-இந்தியா ரிலீஸ் ஆகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

