பவித்ரா வலையில் வசமாக சிக்கிய நரேஷ் பாபு? 4-வது மனைவியாக இதுதான் காரணம்.. பகீர் கிளப்பும் முன்னாள் கணவர்!
பிரபல தெலுங்கு நடிகர் நரேஷ் பாபுவை, நடிகை பவித்ரா லோகேஷ் ஏன் நான்காவதாக திருமணம் செய்து கொண்டார் என கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அவரின் முன்னாள் கணவர் சுசேந்திர பிரசாத்.
பிரபல தெலுங்கு நடிகரும் மகேஷ்பாபுவின் சகோதரருமான நரேஷ் பாபு, நடிகை பவித்ரா லோகேஷை நான்காவது திருமணம் செய்து கொண்ட நிலையில், ஏன் பவித்ரா லோகேஷ் நான்காவது மனைவியாக மாறினார் என்பது குறித்து, அவரின் முன்னாள் கணவர் கூறியுள்ள தகவல்கள் கட்சியை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
கன்னட திரை உலகில், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பவித்ரா லோகேஷ். கன்னட திரைப்படங்களை தாண்டி, தமிழிலும் நடிகர் விஷால் நடித்த அயோக்கியா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கா.பெ.ரணசிங்கம், ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'வீட்டில் விசேஷம்' போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் சுரேந்தர் பிரசாத் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார். கணவருடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த, நிலையில்... திடீர் என கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், பவித்ரா லோகேஷ் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற காரணம், நரேஷ் பாபு உடனான காதல் தான் என கூறப்பட்டது.
இந்நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக பவித்ராவின் முன்னாள் கணவர் சில பகீர் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளார். கணவர் உடனான விவாகரத்துக்கு பிறகு, நடிகர் நரேஷ் பாபுவுடன், ஒரே வீட்டில் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்து வந்த வந்தார். மேலும் புத்தாண்டின் போது, லிப் லாக் வீடியோ ஒன்றை வெளியிட்டு காதலை பகிரங்கமாக அறிவித்த இந்த ஜோடி, கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர்.
நரேஷ் பாபுவின் குடும்ப வழக்கப்படி மிகவும் எளிமையான முறையில் நடந்த இவர்களின் திருமணத்தை தொடர்ந்து, இருவரும் துபாயில் தங்களின் ஹனி மூனை கொண்டாடினர். இது குறித்த சில விடீயோக்களும் வெளியாகி வைரலானது.
Image: Naresh / Twitter
இந்நிலையில் பவித்ராவின் முதல் கணவர் சுரேந்திர பிரசாத், தன்னுடைய மனைவி நரேஷ் பாபுவின் 1500 கோடி ரூபாய் சொத்தை அபகரிப்பதற்காக, திட்டமிட்டு தான் அவரை, தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி திருமணம் என்கிற நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக கூறியுள்ளார். நான் சொல்வது நரேஷ் பாபுவுக்கு இப்போது புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு நாள் கண்டிப்பாக தெரியவரும் பணத்துக்காக தான் பவித்ரா தன்னை விவாகரத்து செய்துவிட்டு நரேஷ் பாபுவை திருமணம் செய்துள்ளதாக அவரின் முதல் கணவரை கூறிய உள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.