கைகூடாத காதல்... கமுக்கமாக கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அஞ்சலி! மாப்பிள்ளை குறித்து கசிந்த தகவல்!
நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் மூலம் நடிகை அஞ்சலி அறிமுகமாகி இருந்தாலும், இவரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனைகளை ஏற்படுத்திய பட வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தது கொடுத்தது தமிழ் சினிமா தான். அந்த வகையில் இவர் தமிழில், இயக்குனர் ராம் இயக்கத்தில் நடித்த 'கற்றது தமிழ்' படத்தில் அஞ்சலியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இப்படத்திற்காக அஞ்சலி சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றார்.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'அங்காடி தெரு ', 'எங்கேயும் எப்போதும்', 'இறைவி', 'தம்பி வெட்டேந்தி சுந்தரம்', 'கலகலப்பு', 'வத்திக்குச்சி' போன்ற படங்களில், பார்ப்பதற்கு பக்கத்துக்கு வீட்டு பெண் போன்று மிகவும் எதார்த்தமான கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றார்.
இந்நிலையில் அஞ்சலி 'எங்கேயும் எப்போதும்' படத்தை தொடர்ந்து நடிகர் ஜெய்யுடன், 'பலூன்' படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் , இருவரும் லிவிங் - டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. இருவரும் சில இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்தது மட்டும் இன்றி, சூர்யா - ஜோதிகாவின் தோசை சேலஞ்சில் கூட ஒன்றாக சேர்ந்து செய்து ஆச்சர்யப்படுத்தினர். எனவே 2018 ஆம் ஆண்டே இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இதை தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கட்டுப்பாட்டில் அஞ்சலி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில் கூட டாக்சிக் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
யார் என பெயரை குறிப்பிடாமல், ஒரு நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கேரியரை கவனிக்க முடியாமல் போனதால், அந்த உறவு தவறான உறவு என அஞ்சலி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கேரியருக்கு தடையாக இருந்த உறவை விட, கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் முக்கிய என நினைத்து அந்த நபருடனான உறவை துண்டித்து விட்டதாக கூறினார்.
தற்போது அஞ்சலியின் கைவசம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும், RC 15 படம் மட்டுமே உள்ள நிலையில், மேலும் காதல் எதுவும் கைகூடாத விரக்தியில் இருந்து வந்த அஞ்சலி, திடீர் என பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளாராம் அஞ்சலி. இவருக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஒரு தொழிலதிபர் என கூறப்படுகிறது. விரைவில் அஞ்சலி தரப்பில் இருந்து திருமணம் குறித்த தகவல் பற்றி விளக்கம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘தவறான படங்கள் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படுகின்றன’.. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பளீச் பேட்டி !