‘தவறான படங்கள் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படுகின்றன’.. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பளீச் பேட்டி !
தென்னிந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்... ஆஸ்கர் விருதுக்கு தவறான படங்கள் அனுப்பப்படுவதாக பேட்டி ஒன்றியில் கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயலின் இசை ஜாம்பவான், டாக்டர் எல்.சுப்ரமணியத்துடனான பேட்டி ஒன்றில் தன்னை பற்றியும்... ஆஸ்கர் விருது குறித்து பல்வேறு கேள்விகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.
உலக அளவில், திரையுலகினரும் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்று ஆஸ்கர். ஹாலிவுட் பிரபலங்கள் முதல் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் வரை அனைவருக்குமே தங்களுடை வாழ்நாளில் இந்த விருதை பெற வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. இந்த கனவை கடந்த 14 வருடங்களுக்கு முன், இரண்டு ஆஸ்கர் விருதுகளை கையில்,ஏந்தியபடி எட்டி பிடித்து இந்தியாவுக்கே பெருமை தேடி தந்தவர் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்.
இவரை தொடர்ந்து, இந்த ஆண்டு ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற... நாட்டு நாட்டு பாடலுக்காக, இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுள்ளார். இந்நிலையில் ஆஸ்கர் விருது மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து, ஏ.ஆர்.ரகுமான் கடந்த ஜனவரி மாதம் கொடுத்த பேட்டி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவரை தொடர்ந்து, இந்த ஆண்டு ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற... நாட்டு நாட்டு பாடலுக்காக, இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுள்ளார். இந்நிலையில் ஆஸ்கர் விருது மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து, ஏ.ஆர்.ரகுமான் கடந்த ஜனவரி மாதம் கொடுத்த பேட்டி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இயக்குனர் மணிரத்னம் பெயரை டேமேஜ் செய்த 5 திரைப்படங்கள்..! ஐஸ்வர்யா ராய் நடித்தும் அட்ட ஃபிளாப்!
எனவே என்னால் நிறைய வித்தியாசம் காட்ட முடிந்தது. மேலும் நான் தொழில்நுட்ப மாற்றத்தின் இடைக்கால நேரத்தில் திரையுலகின் உள்ளே வந்தேன். எனவே எனக்கு நிறைய கற்றுக்கொள்ள நேரம் கிடைத்தது. எனது வெற்றியை மட்டுமே பலர் பார்க்கிறார்கள், அனால் நான் பல தோல்விகளை சந்தித்துள்ளேன். வீட்டில் ஹாம் ஸ்டுடியோ வைத்திருந்ததால் எனக்கு இசையமைக்க நிறைய சுதந்திரம் கிடைத்தது என்றும் கூறியுள்ளார். தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இசை குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், நாம் அனைவருக்குமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும், ஆனால் அதையும் தாண்டி எனக்கு ஆர்வம் இருந்தது. ஹாலிவுட் திரையுலகினரால் செய்யும் முடியும் ஒரு விஷயத்தை ஏன் நம்மால் முடியாது? நாம் அவர்களின் இசையைக் கேட்கும்போது, ஏன் அவர்களால் நம் இசையைக் கேட்க வைக்க முடியாது? என்பது போன்ற கேள்விகளை எனக்குளேயே நான் கேட்டுக்கொண்டே இருந்தேன், 'என்' சிறந்த தயாரிப்பு, சிறந்த தரம், சிறந்த விநியோகம் மற்றும் மாஸ்டரிங் ஆனது… இன்னும் என்னை இயக்குகிறது என தெரிவித்துள்ளார்.
அதே போல் “சில நேரங்களில், இந்திய திரைப்படங்கள் ஆஸ்கார் விருது வரை செல்வதை நான் பார்க்கிறேன்... அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. ஆஸ்கார் விருதுக்கு தவறான படங்கள் அனுப்பப்படுகின்றன என பளீச் என கூறியுள்ளார். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க நாம் அவர்கள் காலனிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பது இல்லை... நம்முடைய காலனியை அணிந்து, முயற்சிக்க வேண்டும் என பேசியுள்ளார்.