இது என்ன சிம்புவின் 'பத்து தல' படத்திற்கு வந்த சோதனை..! ரிலீசான ஒரே மாதத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் சிம்பு - கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான, 'பத்து தல' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் சிம்பு தன்னுடைய வயதுக்கு மீறிய மெச்சூர்டான கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டிய திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தில் ஏ.ஜி.ஆர் என்கிற கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார் சிம்பு. மேலும் இப்படத்தில் ஹீரோவாக கெளதம் கார்த்திக் இதுவரை நடித்திராத போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடித்து அசத்தினார்.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும்... முதல் நாளே மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. அதே போல் முதல் நாளில் 13 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் குறைந்தாலும், முதலுக்கு மோசம் இல்லாத லாபத்தை பெற்று தந்தாக படக்குழு அறிவித்தது மட்டும் இன்றி, இப்படத்தின் சக்ஸஸையும் கொண்டாடி மகிழ்ந்தது.
கர்நாடக பாடகி சுதா ரகுநாதனை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
மேலும் இந்த படத்தில் சிம்புவுக்கு தங்கையாக அனு சித்தாரா நடித்திருந்தார். அதே போல் பிரியா பவானிஷங்கர், கலையரசன், டீ ஜே அருணாச்சலம், சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி, மனுஷ புத்திரன், கெளதம் மேனன் போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படத்தை, ஞானவேல் ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தார்.
இந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால், சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து, 'மாநாடு' மற்றும் 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்களில் நடித்த பின்... மீண்டும் உடல் எடையை கூட்டி இந்த படத்தை நடித்து முடித்தார். இப்படம் கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான, மஃப்டி படத்தின் ரீமேக்கான எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
'பத்து தல' திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி, வெளியான நிலையில்... தற்போது இந்த படத்தின், ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த வாரம்... அதாவது ஏப்ரல் 27-ஆம் தேதி, அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி, சிம்பு ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.