- Home
- Cinema
- ரஜினி வரலேனா என்ன... பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சில் சர்ப்ரைஸ் கெஸ்ட் ஆக வரும் மற்றுமொரு மாஸ் நடிகர்
ரஜினி வரலேனா என்ன... பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சில் சர்ப்ரைஸ் கெஸ்ட் ஆக வரும் மற்றுமொரு மாஸ் நடிகர்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல நடிகர் ஒருவர் சர்ப்ரைச் கெஸ்ட் ஆக கலந்துகொள்ள உள்ளாராம்.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்கிறார்.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அதன் புரமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலான அக நக என்கிற பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் சக்திஸ்ரீ கோபாலன் பாடிய இந்த பாடல் தான் தற்போது ரசிகர்களின் காதுகளில் ரிங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.
இதையும் படியுங்கள்... ஆயிரத்தில் ஒருவன் போல்... கேப்டன் மில்லருக்கும் தரமான சம்பவம் செய்த ஜிவி பிரகாஷ் - அனல்பறக்க வந்த அப்டேட் இதோ
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிடுவார் என படக்குழு நேற்றே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சர்ப்ரைஸ் கெஸ்ட் பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லாஞ்சில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த சர்ப்ரைஸ் கெஸ்ட் சிம்பு தானாம். அவரும் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்பு ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் விழா: வெளிநாட்டில் இருந்து பறந்து வந்த கமல்; உள்ளூரில் இருந்தும் ரஜினி கலந்துகொள்ளாதது ஏன்?