- Home
- Cinema
- ரஜினி நோ சொன்ன டைரக்டருடன் கூட்டணி... சிம்புவின் அடுத்த பட இயக்குனர் இவரா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
ரஜினி நோ சொன்ன டைரக்டருடன் கூட்டணி... சிம்புவின் அடுத்த பட இயக்குனர் இவரா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
பத்து தல திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை இயக்க உள்ள இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது பத்து தல திரைப்படம் தயாராகி உள்ளது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற திரைப்படங்களை இயக்கிய ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் சிம்பு உடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம் எம்ன மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
பத்து தல திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் பணிகள் ஒருபக்கம் ஜோராக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் நடிகர் சிம்பு தனது அடுத்த படத்திற்காக தாய்லாந்தில் தயாராகி வருகிறார்.
இதையும் படியுங்கள்... அப்டேட்டுக்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த லைகா... ஏகே 62 அறிவிப்பு எப்போ ரிலீஸ்?
இருப்பினும் அவரது அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு எகிறிய வண்ணம் உள்ளது. முதலில் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படம் தற்போதைக்கு உருவாக வாய்ப்பில்லை என பின்னர் தகவல் வெளியானது. இதையடுத்து மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. ஆனால் சமீபத்திய தகவல்படி சிம்புவின் அடுத்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கடந்த 2020-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆவார். இதையடுத்து ரஜினிக்காக கதை தயார் செய்து ஆவலோடு காத்திருந்தார் தேசிங்கு. ஆனால் ரஜினி அந்த கதைக்கு நோ சொல்லிவிட்டதால் தற்போது சிம்பு உடன் கூட்டணி அமைக்க தயாராகி உள்ளார் தேசிங்கு. இது ரஜினிக்கு சொன்ன கதையா அல்லது வேறு ஒரு புதுக்கதையா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
இதையும் படியுங்கள்... ரஜினிக்கு தங்கையாக 25 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகரின் மனைவி!