'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் திடீர் திருப்பம்... அதிரடியாக என்ட்ரியாகும் புதிய நடிகை.! புகைப்படம் இதோ...
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதிய நடிகை ஒருவர், என்ட்ரி கொடுக்க உள்ளதை தெரிவிக்கும் விதமாக, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், கூட்டு குடும்பத்தின் பாசத்தை போற்றும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'.
வானத்தை போல, ஆனந்தம், போன்ற அண்ணன் தம்பிகள் பாச கதைக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ அதே வரவேற்பு இந்த சீரியலுக்கும் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது.
மற்ற சீரியல் கதைகள் போல், வில்லி, கொலை, போலீஸ், விறுவிறுப்பு, பரபரப்பு, நயவஞ்சகம் போன்ற கோணத்தில் கொண்டு செல்லாமல் பாசத்தின் அடிப்படையை மட்டுமே வைத்து இந்த சீரியலை நகர்த்தி செல்லும் விதம் கூடுதல் சிறப்பு.
இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு குறைந்து விட்டதாக, ரசிகர்கள் கூறி வந்ததை தொடர்ந்து... 'பாக்கியலட்சுமி' சீரியலுடன் சங்கமம் செய்து சில நாட்கள் ஒளிபரப்பானது.
அதை தொடர்ந்து, சில வாரங்களாக... மூர்த்தி எப்படி தனத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணம் நடைபெறும் சூழல் எப்படி உருவானது என்கிற பிளாஷ் பேக் ஸ்டோரி விறுவிறுப்பாக சொல்லப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து தற்போது புதிய நடிகை ஒருவர், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
பிளாஷ் பேக் ஸ்டோரி காட்டியபோது, சத்திய மூர்த்தியை திருமணம் செய்து கொள்வதாக கூறி... மண்டபத்தில் இருந்து ஓடி சென்ற மல்லி கதாபாத்திரம் தான் தற்போது மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார்.
இதனை தெரிவிக்கும் விதமாக, சத்தியமூர்த்தி - தனத்துடன், இவர் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இவரது என்ட்ரி எப்படி பட்ட பிரச்சனைகளை உருவாக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.