MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தூக்கப்படும் தக் லைஃப்; இந்த வாரம் தியேட்டர் & OTTயில் வரிசைகட்டி ரிலீஸ் ஆகும் படங்கள் பட்டியல் இதோ

தூக்கப்படும் தக் லைஃப்; இந்த வாரம் தியேட்டர் & OTTயில் வரிசைகட்டி ரிலீஸ் ஆகும் படங்கள் பட்டியல் இதோ

வருகிற ஜூன் 13ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் மற்றும் பிறமொழி படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 12 2025, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
June 13 Theatre and OTT Release Movies
Image Credit : Asianet News

June 13 Theatre and OTT Release Movies

ஜூன் மாதம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமையவில்லை. ஏனெனில் இம்மாதம் தொடக்கத்தில் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என்றெல்லாம் பில்டப் விடப்பட்டது. ஆனால் அதன் நிலை தற்போது பரிதாபமாக உள்ளது. போகிற போக்கை பார்த்தால் 100 கோடி வசூலிப்பதே கேள்விக்குறி தான் என கூறப்படுகிறது. இந்த நிலையில், வருகிற ஜூன் 13ந் தேதி என்னென்ன படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
தியேட்டர் ரிலீஸ் தமிழ் படங்கள்
Image Credit : Twitter

தியேட்டர் ரிலீஸ் தமிழ் படங்கள்

இந்த வாரம் தமிழ் திரையுலகில் மூன்று படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளன. அதில் ஒன்று படைத் தலைவன். இப்படத்தில் நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக நடித்துள்ளார். அன்பு இப்படத்தை இயக்கி உள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 13ந் தேதி திரைக்கு வருகிறது. இதனுடன் கட்ஸ் என்கிற திரைப்படமும், ஹோலோகாஸ்ட் என்கிற பேய் படமும் திரைக்கு வர உள்ளது. இந்த இரண்டுமே சிறு பட்ஜெட் படங்கள்.

Related Articles

Related image1
480 நாட்களுக்குப் பிறகு.. ‘லால் சலாம்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
Related image2
டிடி நெக்ஸ்ட் லெவல் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
34
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்
Image Credit : Twitter

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்

ஓடிடியில் இந்த வாரம் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி இருந்தார். இப்படத்தில் சந்தானத்துடன் கெளதம் மேனன், யாஷிகா, கஸ்தூரி, செல்வராகவன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை ஆர்யா தயாரித்து இருந்தார். இப்படம் ஜூன் 13ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதுதவிர லெவன் என்கிற திரைப்படமும் இந்த வாரம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஆகிய இரு ஓடிடி தளங்களிலும் ரிலீஸ் ஆக உள்ளது.

44
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள் மற்றும் வெப் தொடர்கள்
Image Credit : Asianet News

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள் மற்றும் வெப் தொடர்கள்

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஆலப்புழா ஜிம்கானா என்கிற திரைப்படம் வருகிற ஜூன் 13ந் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர தெலுங்கில் நடிகை சமந்தா தயாரிப்பில் ரிலீஸ் ஆன ஷுபம் திரைப்படமும் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. மேலும் அக்‌ஷய் குமார் நடித்த இந்தி திரைப்படமான கேசரி சாப்டர் 2, ஜூன் 13ந் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இதேபோல் ராணா டகுபதி நடித்த ராணா நாயுடு என்கிற வெப் தொடரும் ஜூன் 13ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
சினிமா
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Related Stories
Recommended image1
480 நாட்களுக்குப் பிறகு.. ‘லால் சலாம்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
Recommended image2
டிடி நெக்ஸ்ட் லெவல் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved