- Home
- Cinema
- உப்பு கப்புரம்பு முதல் தக் லைஃப் வரை; ஜூலை 4ந் தேதி OTTயில் ரிலீஸாகும் படங்கள் & வெப் தொடர் லிஸ்ட் இதோ
உப்பு கப்புரம்பு முதல் தக் லைஃப் வரை; ஜூலை 4ந் தேதி OTTயில் ரிலீஸாகும் படங்கள் & வெப் தொடர் லிஸ்ட் இதோ
ஜூலை முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ 5 போன்ற ஓடிடி தளங்களில் ரிலீஸாகும் படங்கள் மற்றும் வெப் தொடர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

OTT Release Movies and Web Series on July 4
ஓடிடி தளங்கள் தான் தற்போது பெரும்பாலானோருக்கு டைம் பாஸ் செய்ய உதவி வருகிறது. முன்பெல்லாம் தியேட்டரில் ரிலீசாகும் படங்களை தான் பார்க்க முடிந்தது. ஆனால் ஓடிடி தளங்களின் வருகைக்கு பின்னர் எந்த மொழியில் எந்த ஒரு படமோ அல்லது வெப் தொடரோ வந்தாலும் அதை ஓடிடியில் பார்த்துவிடுகிறார்கள். இதன் காரணமாகவே ஓடிடிக்கென பிரத்யேகமாக படங்கள் மற்றும் வெப் தொடர்கள் தயாரிக்கப்பட்டு அதை நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஜூலை முதல் வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்கள் மற்றும் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உப்பு கப்புரம்பு
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் உப்புகப்புரம்பு. 1990 களில் நடக்கும் கதை இது. ஒரு கிராமத்தில் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய கல்லறையில் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. அப்போது அந்த கிராமத்திற்கு தலைவராக பொறுப்பேற்ற அபூர்வாவும், கல்லறை பராமரிப்பாளரான சின்னாவும் சேர்ந்து கல்லறை விவகாரத்தில் தீர்வு காண முயல்கிறார்கள். அப்போது அவர்கள் இருவரும் எதிர்கொள்ளும் விசித்திரமான மற்றும் நகைச்சுவையான நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் இந்த உப்பு கப்புரம்பு. இப்படத்தை சசி இயக்கி உள்ளார். இப்படம் ஜூலை 4ந் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
தக் லைஃப்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் தக் லைஃப். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 4ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாம். இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆனது. ஓடிடி ரிலீசுக்கு பின் என்னென்ன விமர்சனங்களை எதிர்கொள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மெட்ராஸ் மேட்னி
காளி வெங்கட் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தை கார்த்திகேயன் மணி என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இதில் ரோஷினி ஹரிப்பிரியன், ஜார்ஜ் மரியான், ஷெல்லி கிஷோர், சத்யராஜ், சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற ஜூலை 4ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
ஓடிடியில் ரிலீசாகும் மற்ற மொழி படங்கள் மற்றும் வெப் தொடர்கள்
ஜூலை 2ந் தேதி The Old Guard 2 என்கிற ஆங்கிலத் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதையடுத்து ஜூலை 4ந் தேதி OutCome The Wolves என்கிற திரைப்படம் வி.ஆர் ஓடிடியிலும், in the lost lands திரைப்படம் Lions Gate Play என்கிற ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது.
அதேபோல் ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு தி ஹண்ட் என்கிற வெப் தொடரும் ஜூலை 4ந் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர பிரியாமணி நடித்த Good Wife என்கிற இந்தி வெப் தொடரும் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. மேலும் The Sand Man என்கிற ஆங்கில வெப் தொடரின் இரண்டாவது சீசன் ஜூலை 4 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.