MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இந்த வாரம் ஓடிடியில் போட்டி போட்டு ரிலீஸ் ஆன படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இந்த வாரம் ஓடிடியில் போட்டி போட்டு ரிலீஸ் ஆன படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக இந்த வாரம் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட், சோனி லிவ், ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் படங்களை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 27 2025, 04:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
OTT Release
Image Credit : X

OTT Release

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்

ஓடிடியில் இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் ஒன்று கெவி. அப்படத்தில் பிக்பாஸ் ஜாக்குலின் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். அப்படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இன்று முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. மலை வாழ் மக்களின் வாழ்க்கை போராட்டங்களை எதார்த்தமாக படம் பிடித்து காட்டிய படம் இது. அவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் சமூக சிக்கல்களை மையமாக கொண்டு இந்த படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தமிழ் தயாளன்.

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்றொரு தமிழ் திரைப்படம் மாயக்கூத்து. கர்வம் கொண்ட தொடர்கதை எழுத்தாளர் ஒருவர் எழுதும் மூன்று கதைகளில் சிக்கலில் இருக்கும் முக்கிய பாத்திரங்கள் தங்களுக்கான நீதியைக் கேட்டு அவரிடம் நேரில் வந்து நிற்கிறார்கள். அதன்பிறகு அவரின் மனநிலை என்னவாகிறது, அந்த பாத்திரங்கள் நிஜமா, அவர்களுக்கான நீதி கிடைத்ததா இல்லையா என்பதே கதைக்களம். இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள்
Image Credit : Jiohotstar

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள்

தண்டர்போல்ட்ஸ் (Thunderbolts) – ஆகஸ்ட் 27, 2025

மார்வெல் ஸ்டுடியோவின் அதிரடி பொழுதுபோக்குப் படமான தண்டர்போல்ட்ஸ் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. சூப்பர் ஹீரோக்களுக்குப் பதிலாக, எதிர் ஹீரோக்கள் மற்றும் முன்னாள் வில்லன்கள் ஒரு குழுவாக இணைந்து ஒரு பணிக்காகச் செயல்படுகிறார்கள். மார்வெல் ரசிகர்களுக்கு இது மிகவும் சுவாரஸ்யமான வெளியீடு.

34
நெட்பிளிக்ஸ் வெளியீடுகள்
Image Credit : Netflix

நெட்பிளிக்ஸ் வெளியீடுகள்

கிங்டம் (Kingdom) - ஆகஸ்ட் 27, 2025

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படமும் இன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. கெளதம் இயக்கி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

மை லைஃப் வித் தி வால்டர் பாய்ஸ் சீசன் 2 (My Life with the Walter Boys Season 2) – ஆகஸ்ட் 28, 2025

ஒரு டீனேஜ் பெண் தனது பாதுகாவலர் குடும்பத்துடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் கதை. காதல், நம்பிக்கை, நட்பு போன்ற அம்சங்களுடன் இந்தத் தொடர் இருக்கும்.

தி தேர்ஸ்டே மர்டர் கிளப் (The Thursday Murder Club) – ஆகஸ்ட் 28, 2025

ஓய்வு இல்லத்தில் உள்ள நண்பர்கள் கொலை வழக்குகளை விளையாட்டாக விசாரிக்கிறார்கள். ஆனால் ஒரு உண்மையான வழக்கில் சிக்கிக் கொள்கிறார்கள்.

டூ கிரேவ்ஸ் (Two Graves) – ஆகஸ்ட் 29, 2025

இரண்டு சிறுமிகள் காணாமல் போனதால் கடலோர நகரம் அதிர்ச்சியடைகிறது. உண்மையை அறிய ஒரு வயதான பெண் தியாகம் செய்கிறாள்.

லவ் அன்டேங்கிள்டு (Love Untangled) – ஆகஸ்ட் 29, 2025

ஒரு டீனேஜ் பெண் தனது பள்ளி ஹார்ட் throப் கவனத்தை ஈர்க்க தனது பாணியை மாற்றுகிறாள். ஆனால் ஒரு புதிய மாணவர் வருகையால் அவளது வாழ்க்கை மாறுகிறது.

கராத்தே கிட் லெஜெண்ட்ஸ் (Karate Kid Legends) – ஆகஸ்ட் 29, 2025

லீ ஃபாங் என்ற குங்ஃபூ புரோடீஜி நியூயார்க் நகரத்திற்கு வந்த பிறகு கராத்தே போட்டியில் பங்கேற்கும் பயணம் தொடங்குகிறது. திரு. ஹான் மற்றும் டேனியல் லரூஸ்ஸோவின் உதவியுடன் அவர் புதிய சவால்களை எதிர்கொள்கிறார்.

44
சோனி லிவ் ஓடிடி ரிலீஸ்
Image Credit : Sony Liv

சோனி லிவ் ஓடிடி ரிலீஸ்

ஃபோர் அண்ட் ஹாஃப் கேங் - ஆகஸ்ட் 29

சோனி லிவ்வில் இந்த ஆண்டு வரவிருக்கும் மலையாள ஒரிஜினல் தொடர்களில் ‘ஃபோர் அண்ட் ஹாஃப் கேங்’ அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, திருவனந்தபுரத்தைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த டார்க் ஆக்ஷன் நகைச்சுவை அனைவரையும் கவரும் வகையில் ஆகஸ்ட் 29 அன்று மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image2
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image3
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Related Stories
Recommended image1
Coolie : ரிலீசுக்கு முன்னரே தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்த கூலி? திரையரங்கு, ஓடிடி விற்பனை எத்தனை கோடி?
Recommended image2
ஷூட்டிங்கே முடியல அதற்குள் விற்பனையான ராஜமௌலி படத்தின் ஓடிடி உரிமம் - தட்டிதூக்கியது யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved