நடிச்ச எல்லாமே பயோ பிக் படங்கள்; வித்தியாசமான சிந்தனையோடு வலம்வந்த தமிழ் நடிகர் பற்றி தெரியுமா?
Bio Pic Actor :உண்மையில் ஒரு பயோ பிக் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது இன்றைய காலகட்டத்தில் பல இளம் நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு பெரும் ஆசையாகவும், ஆர்வமாகவும், பெருமையாகவும் இருந்து வருகிறது.
Actor Dhandapani Desikar
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இதனுடைய வரலாறு என்பது நூறு ஆண்டுகளையும் கடந்து பயணித்து வரும் ஒன்று. ஆனால் இன்றைய காலகட்டத்தில் உள்ள நடிகர்கள் செய்ய நினைக்கும் வித்தியாசமான பல விஷயங்களை, தமிழ் சினிமா ஆரம்பித்த காலகட்டத்திலேயே பல நடிகர்கள் செய்திருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் ஒரு பயோ பிக்கில் நடிக்க வேண்டும் என்கின்ற ஆசை எல்லா கலைஞர்களுக்கும் இருக்கும்.
ஆனால் பயோ பிக்கில் நடிப்பதை மட்டுமே தன்னுடைய இலட்சிய பயணமாக கொண்டு சினிமாவில் பயணித்திருக்கிறார் ஒருவர். அவர் நடித்தது வெகு சில திரைப்படங்கள் தான் என்றாலும், அந்த திரைப்படங்கள் அனைத்துமே பல மேதைகளை பெருமைப்படுத்தும் பயோபிக் திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் ஒருவர் செய்திருக்கிறார் என்றால் நமக்கு அது ஆச்சரியத்தை நான் தருகிறது.
மஞ்சள் காட்டு மைனாவாக மாறி வைப் செய்த ரம்யா பாண்டியன்! வைரலாகும் ஹல்தி புகைப்படங்கள்!
Dhandapani Desikar
தண்டபாணி தேசிகர், தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் என்கின்ற ஊரில் உள்ள திருச்செங்காட்டங்குடி என்கின்ற இடத்தில் பிறந்தவர் தான் இவர். இளம் வயதிலேயே கர்நாடக இசை மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் சிஷ்யனாக தன்னை மாற்றிக்கொண்டு இசை பயில தொடங்கி இருக்கிறார். அதன்பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பேராசிரியராகவும், அந்த துறையின் தலைவராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். திருக்குறளை பாடலாக பாடி பல சாதனைகள் படைத்த இவருடைய பெருமை, அப்போதைய மெட்ராஸ் வரை பரவுகிறது. இயக்குனர்கள் சிலர் இவரை வைத்து படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள்.
Bio Pic Actor
ஆனால் இசையின் மீது அதிக ஆர்வம் கொண்ட தண்டபாணி தேசிகர், தான் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களில் மட்டுமே நடிக்க ஆசையாக இருப்பதாக கூறியிருக்கிறார். இந்த சூழலில் கடந்த 1937 ஆம் ஆண்டு இயக்குனர் வடிவேலு நாயக்கர் இயக்கிய "பட்டினத்தார்" என்ற திரைப்படத்தில் தண்டபாணி தேசிகர் நாயகனாக நடிக்க தொடங்கினார். அது தான் அவர் வாழ்க்கையில் நடித்த முதல் திரைப்படம் ஆகும். 1937 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ச்சியாக அவருடைய திரைப்படங்களில் வாழ்க்கை வரலாறு சம்பந்தமான கதைகளில் மட்டுமே நடிக்க தொடங்கினார்.
Nandhanar
1938 ஆம் ஆண்டு வெளியான "தாயுமானவர்", 1939 ஆம் ஆண்டு வெளியான "மாணிக்கவாசகர்" மற்றும் 1942 ஆம் ஆண்டு வெளியான "நந்தனர்" என்று அவர் நடித்த நான்கு திரைப்படங்களும் பயோ பிக் திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிறகும் சில முக்கிய நபர்களின் பயோபிக் திரைப்படத்தில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சில திரைப்படங்களில் திருக்குறள் சம்பந்தமான பாடல்களையும் தண்டபாணி தேசிகர் பாடி இருக்கிறார். 1908 ஆம் ஆண்டு பிறந்த தண்டபாணி தேசிகர், கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி தன்னுடைய 63 வது வயதில் காலமானார்.
பிளாப் ஆன ப்ளெடி பெக்கர்; முதல் படமே தோல்வியடைந்ததால் நெல்சன் எடுத்த அதிரடி முடிவு!