ஆதிபுருஷ் ரிலீசாகும் தியேட்டர்களில் ஒரு சீட் அனுமனுக்கு ஒதுக்கப்படும் - படக்குழு அறிவிப்பு
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் ஒரு சீட் அனுமனுக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமா உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். இராமாயணத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளனர். இதில் ராமராக பிரபாஸ் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள்... ‘விடாமுயற்சி’யில் திடீர் டுவிஸ்ட்... அஜித்தை அடிக்க மாஸ்டர் பட வில்லனை களமிறக்கும் மகிழ் திருமேனி
அந்த வகையில் அப்படத்தின் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று திருப்பதியில் நடைபெற உள்ளது. இதற்காக திருப்பதி வந்துள்ள நடிகர் பிரபாஸ், இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இப்படம் வெற்றியடைய வேண்டி அவர் பிரார்த்தனையும் செய்துள்ளார். திருப்பதிக்கு வந்த நடிகர் பிரபாஸை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
இந்நிலையில், ஆதிபுருஷ் படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸ் ஆகும் அனைத்து தியேட்டர்களிலும் ஒரு சீட் மட்டும் அனுமனுக்காக ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்திய திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், கடவுளுக்காக தியேட்டரில் ஒரு இருக்கை ஒதுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இதையும் படியுங்கள்... திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த பிரபாஸ்... தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டி பிரார்த்தனை