தன் பிறந்தநாளில் நடிகர் யோகிபாபு வீட்டில் நடந்த விசேஷம்... கொரோனாவால் மீண்டும் இப்படி நடந்துடுச்சே...!
தனக்கு நடக்க வேண்டிய எந்த விசேஷங்களும் பிரம்மாண்டமாக நடக்கவில்லையே என கவலையில் இருந்த யோகிபாபு, மகனுடைய பெயர் சூட்டு விழாவையாவது பிரம்மாண்டமாக கொண்டாட நினைத்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி காதும், காதும் வைத்தது போல் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை சிம்பிளாக கரம் பிடித்தார்.
சொந்த ஊரான செய்யாறு அருகேயுள்ள மேல்நகரம்பேடு கிராமத்தில் மிகவும் எளிமையாக திருமணத்தை நடத்தி முடித்த யோகிபாபு, ‘சில தவிர்க்க முடியாத காரணங்களால் எல்லோரையும் திருமணத்துக்கு அழைக்க முடியவில்லை’ என விளக்கமளித்தார். தொடர்ந்து திரைப்பிரபலங்களை அழைத்து சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டார்.
இடையில் புகுந்த கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. லாக்டவுன் முடிந்த பிறகு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தலாம் என காத்திருந்த நிலையில், மனைவி மஞ்சு பார்கவி கர்ப்பமானார். சரி வளைகாப்பு நிகழ்ச்சியையாவது பிரம்மாண்டமாக நடத்தலாம் என நினைத்தார். டிசம்பர் மாதம் 29ம் தேதி வளைகாப்பு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வளைகாப்புக்கு முந்தைய நாள் இரவே மஞ்சுவுக்கு பிரசவ வலி வந்து அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து விட்டார்.
தனக்கு நடக்க வேண்டிய எந்த விசேஷங்களும் பிரம்மாண்டமாக நடக்கவில்லையே என கவலையில் இருந்த யோகிபாபு, மகனுடைய பெயர் சூட்டு விழாவையாவது பிரம்மாண்டமாக கொண்டாட நினைத்தார். ஆனால் கொரோனா 2வது அலை சுழற்றி அடிக்க ஆரம்பித்தது. இதனால் நொந்துபோனவர் 7 மாத காத்திருப்பிற்கு பிறகு மகனுக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியையும் வீட்டிலேயே சிம்பிளாக நடத்தி முடித்திருக்கிறார்.
இன்று யோகி பாபு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அத்தோடு மகனின் பெயர் சூட்டு விழாவையும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து நடத்தி முடித்துள்ளார்.
விழாவை சிம்பிளாக நடத்தினாலும் குழந்தைக்கு விசாகன் என்ற க்யூட் பெயரை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார் யோகிபாபு.
அத்தோடு வீட்டிலேயே நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி தன்னுடைய பிறந்த நாளையும் கொண்டாடியுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
காலை முதலே யோகிபாபுவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோக்களும் லைக்குகளை குவித்து வருகிறது.
நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ பிறந்த நாள் கொண்டாடிய யோகிபாபு
கொரோனாவால் சிம்பிளாக முடிந்த கொண்டாட்டம்