- Home
- Cinema
- தெலுங்கு பர்ஸ்ட்.. தமிழ் நெக்ஸ்ட்! ஜூனியர் NTR-க்கு ஜோடியான ஜான்வி கபூர்- முதல் படத்துக்கே இவ்ளோ கோடி சம்பளமா?
தெலுங்கு பர்ஸ்ட்.. தமிழ் நெக்ஸ்ட்! ஜூனியர் NTR-க்கு ஜோடியான ஜான்வி கபூர்- முதல் படத்துக்கே இவ்ளோ கோடி சம்பளமா?
பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், தெலுங்கில் தயாராகும் என்.டி.ஆர்.30 படம் மூலம் தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் மரணமடைந்த பின் இவரது மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமானார். தடக் என்கிற படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த ஜான்வி, கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட்லக் ஜெர்ரி, மிலி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து அங்கு பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாஹி என்கிற இந்தி படம் தயாராகி வருகிறது.
இதனிடையே கடந்த சில மாதங்களாகவே நடிகை ஜான்வி கபூர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வரவி வந்தது. குறிப்பாக அவர் தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாக உள்ள பையா 2 படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் அதெல்லாம் வதந்தி எனக்கூறி போனி கபூர் முற்றுப்புள்ளி வைத்த நிலையில், ஜான்வி கபூர் நடிக்க உள்ள தெலுங்கு படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... வெற்றிமாறனின் விடுதலை உள்பட இத்தனை தமிழ் படங்கள் ஐபோனில் படமாக்கப்பட்டுள்ளதா..! ஆச்சர்ய தகவல் இதோ
அதன்படி தெலுங்கு முன்னணி இயக்குனராக இருக்கும் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாக உள்ள என்.டி.ஆர். 30 திரைப்படம் முன்னணி தெலுங்கு நடிகரான ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் ஜான்வி கபூர். இதன்மூலம் தென்னிந்திய திரையுலகில் நடிகை ஜான்வி ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இதையடுத்து விரைவில் அவர் தமிழ் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகின்றன.
இந்நிலையில் என்.டி.ஆர். 30 படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் வாங்கி உள்ள சம்பள விவரம் முன்னணி நடிகைகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அதன்படி அவர் தான் நடிக்கும் முதல் தெலுங்கு படத்திற்காக ரூ.4 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா, ராஷ்மிகா ஆகியோரும் இதே அளவு சம்பளம் தான் வாங்கி வருகிறார்கள். அந்த சம்பளத்தை ஜான்வி கபூர் முதல் படத்துக்கே வாங்கி உள்ளது தான் டோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
இதையும் படியுங்கள்... செல்ல மகனுடன் நீச்சல் குளத்தில்.. குழந்தையாக மாறி ஆட்டம் போடும் காஜல் அகர்வால்..! வைரலாகும் வீடியோ..!